பாரதி பெயரை மோடி சொன்னால் மாலனுக்கு உதை விழும்
புது டெல்லியில் நடைபெறும் குடியரசு தின ஊர்வலத்துக்கான அலங்கார ஊர்தியில் தமிழ்நாட்டின் சார்பாக வீர மங்கை வேலு நாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, மகாகவி பாரதி ஆகியோரின் உருவங்களை வைப்பதை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது.
அதே போல கேரள மாநிலத்தின் சமூக சீர்திருத்தவாதி நாராயணகுருவின் உருவத்தை வைப்பதையும் நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு.
மேற்கு வங்க மாநிலம் முன்வைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸிற்கும் அதே கதிதான்.
இந்தியாவின் விடுதலைப் போரில் காட்டிக் கொடுத்த கருங்காலியாக மட்டும் பங்களிப்பு செய்துள்ளவர்கள் சங்கிகள். ஜாதி, மத வெறியை பரப்புபவர்கள் சங்கிகள்.
கருங்காலிகளுக்கு தெரியுமா சுதந்திரப் போராட்ட வீரர்களின் அருமை?
வெறியர்களுக்குத்
தெரியுமா சமூக சீர்திருத்தவாதிகளின் பெருமை?
அதனால்தான் இப்படி கேவலமாக நடந்து கொண்டுள்ளார்கள்.
மோதி பாரதியை எப்படி மதிக்கிறார் பாருங்கள் என்று இனி மாலன் வாய் திறந்தால் அவருக்குத்தான் உதை விழும்.
பிகு: பிரிட்டிஷ் மகாராணியின் காலில் சாவர்க்கர் மண்டியிட்டது போன்ற ஒரு சிற்பத்தை வைத்தால் அதை அனுமதிப்பீர்கள் அல்லவா மோடி? இந்த லட்சணத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக உங்கள் மாண்பு குறைந்து விட்டதாய் உங்கள் கட்சி சில்லறைகள் குதிக்கிறது.
No comments:
Post a Comment