மேலே உள்ள படத்தில் சமஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுடன் இருக்கிற நபர் எஸ்.பி.மௌர்யா. பாஜகவிலிருந்து சில நாட்கள் முன்பாக சமஜ்வாடி கட்சிக்கு தாவியவர்.
2014 ம் ஆண்டு அந்த மனிதன் மீது ஒரு வெறுப்புப் பேச்சு வழக்கு ஒன்று பதியப்பட்டிருந்தது. அந்த வழக்கை நேற்று தூசி தட்டி எடுத்து அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளார் ஒரு நீதிபதி.
வழக்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் பாஜகவிலிருந்தவரை அந்த வழக்கை மூடி வைத்து விட்டு கட்சி மாறிய பின்பு கைது செய்யச் சொல்வது மட்டும் என்ன நியாயம் என்று புரியவில்லை.
ஓய்வு பெற்ற பின் அந்த நீதிபதிக்கு என்ன பதவியோ?
No comments:
Post a Comment