Tuesday, January 25, 2022

சூப்பரான கொள்கைதானே மோடி?

"லாபம் தனியாருக்கு, அரசுக்கு நஷ்டம்" என்ற உங்கள் கொள்கை சூப்பரான கொள்கை மோடி.

ஆமாம்.

பெரு முதலாளிகளுக்கு சூப்பரான கொள்கை. நாட்டு மக்களுக்குத்தான் சுடுகாட்டுக் கொள்கை. . . 



*நாளொரு கேள்வி: 23.01.2022*

 தொடர் எண் : *602*

 இன்று நம்மோடு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் *சி. எச். வெங்கடாசலம்* அவர்கள்

##########################

 *லாபம் தனியாருக்கு...*

*நட்டம் அரசுக்கு...*

 கேள்வி: தனியார் மயக் கொள்கையில் வெளிப்படும் பெரும் முரண் என்ன

 *சி.எச். வெங்கடாசலம்*

 ஒரு உதாரணம்.

 *.டி.பி. வங்கி* 2021 - 22 இல் ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் ரூ 603 கோடி நிகர லாபத்தையும், செப்டம்பர் மாதம் முடிந்த காலாண்டில் ரூ 567 கோடி நிகர லாபத்தையும் காண்பித்தது. அரசு, இப்படி லாபம் காண்பித்துள்ள .டி.பி. வங்கியை தனியார் வசம் ஒப்படைக்க முடிவெடுக்கிறது

 *வோடா ஃபோன் ஐடியா நிறுவனம்* 2021 - 22 இல் ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் ரூ 7317 கோடி நிகர நட்டத்தையும், செப்டம்பர் மாதம் முடிந்த காலாண்டில் ரூ 7132  கோடி நிகர நட்டத்தையும் சந்தித்துள்ளது. அரசோ, நட்டம் காண்பிக்கும்  வோடா ஃபோன் ஐடியா நிறுவனத்தின் 35.8 சதவீத பங்குகளை ரூ 16000 கோடிகளுக்கு வாங்கி தனிப் பெரும் பங்குடமையாளராக மாறி இருக்கிறது

 இதுவே பொதுத்துறை  தனியார் மயக் கொள்கையில் வெளிப்படும் பெரும் முரண்

 *செவ்வானம்*

 

No comments:

Post a Comment