எந்த நேரத்தில் குழந்தைகள் நிகழ்ச்சியால் மோடியின் மாண்பு குறைந்தது என்று ஆட்டுக்காரர் குறை சொன்னாரோ, அதற்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகள் எல்லாமே மோடி என்ற மனிதனுக்கு மாண்பு என்றொரு எழவெல்லாம் கிடையாது என்றுதான் நிரூபிக்கப் பட்டு வருகிறது.
அலங்கார ஊர்தி பிரச்சினை நேற்று என்றால் டெலி ப்ராம்ப்டர் பிரச்சினை இன்று.
உலக பொருளாதார மையத்தின் இணைய வழிக் கூட்டத்தில் மோடி பேசும் போது ஒரு கட்டத்தில் தடுமாறுகிறார். வார்த்தையே வரவில்லை. வெறும் காற்றுதான் வந்தது.
காரணம்?
டெலிப்ராம்ப்டர் என்ற கருவியின் மூலமாகத்தான் மோடி பேச வேண்டிய பேச்சு வரி வரியாக ஓடிக் கொண்டிருக்கும். அதைப் பார்த்துத்தான் அண்ணன் வீர வஜனமெல்லாம் எடுத்து விடுவார். அந்த யந்திரம் பழுது பட்டதுதான் நேற்றைய தடங்கலுக்குக் காரணம் என்று சொல்கிறார்.
அப்படியெல்லாம் டெலிப்ராம்ப்டர் பிரச்சினையால் ஒன்றும் பேச்சு தடைபடவில்லை. வேறு தொழில் நுட்பக் கோளாறுதான் காரணம் என்று சங்கிகள் முட்டு கொடுக்கிறார்கள்.
எங்கள் மோடிக்கு டெலிப்ராம்ப்டர் எல்லாம் தேவை கிடையாது என்று அவர்கள் யாரும் சொல்லவில்லை.
ஏனென்றால் அவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
சொந்த சரக்கில்லாத . ...................................தான் மோடி என்று ...
பிகு: நீங்களேஅந்த புள்ளிகளை நிரப்பிக் கொள்ளுங்கள். நான் எழுதினாலும் சரி, நீங்கள் நிரப்பினாலும் சரி மோடிக்கு இல்லாத மாண்பிற்கு சேதாரம்தான். . .
மூடன்
ReplyDeleteமுட்டாள்
அறிவிலி
வெற்று வேட்டு
டுபாக்கூர்
மோசடிப் பேர்வழி
புள்ளியிட்ட இடத்தில் நிரப்ப இந்த் பட்டங்கள் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?