Saturday, January 22, 2022

அடுத்த அராஜகமென்ன மோடி?

 


காட்டிக் கொடுத்த கருங்காலிகளாக வரலாற்றில் இடம் பெற்றுள்ள துரோகிகளின் வாரிசுகளான மோடி வகையறாக்கள் இன்னொரு வரலாற்றுச் சின்னத்தை சீர்குலைத்துள்ளனர்.

வங்க தேச விடுதலைப் போரில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கான நினைவுச் சின்னமாக டெல்லி இந்தியா கேட் அருகில் அமர் ஜவான் ஜோதி என்னும் அணையா ஜோதி உள்ளது.

அந்த ஜோதி நேற்று அணைக்கப்பட்டு விட்டது.

அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படவில்லை. புதிய போர் நினைவுச் சின்னத்தில் உள்ள ஜோதியோடு ஐக்கியமாகி விட்டது என்று ஒரு விளக்கம் தருகிறது அரசு.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்த நந்தனாரை எரித்துக் கொன்று விட்டு அவர் சிவனோடு ஜோதி வடிவில் ஐக்கியமாகி விட்டார் என்று கதை விட்டு நந்தன் வந்த தெற்கு வாசலை இன்னமும் மூடி வைத்திருக்கிற அராஜகத்திற்கு கொஞ்சமும் குறையாத அராஜகம் இது.

வங்க தேசப் போரை வென்றது இந்திரா காந்தி என்பதை நினைவு படுத்துவதால்தான் அமர் ஜவான் ஜோதி அணைக்கப்பட்டுள்ளது.

இவர்களால் அப்படி ஏதாவது ஒரு சாதனையை சொல்ல முடியுமா?

கார்கில் போர் வெற்றி என்று சொன்னாலும் 

ஊடுறுவலை தடுக்க முடியாத, ஊடுறுவல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாத வாஜ்பாய் காலத்து உளவுத்துறையின் கையாலாகத தனத்தையும் இறந்து போன வீரர்களின் சடலங்களை அடக்கம் செய்ய வாங்கிய சவப் பெட்டியில் கூட ஊழல் செய்ததும்தானே இணைந்தே நினைவுக்கு வருகிறது!

"எல்லையிலே வீரர்கள்" என்று வஜனம் பேசியவர்கள் ஆட்சியில்தான் இறந்து போன வீரர்கள் நினைவுச் சின்னம் அழிக்கப்படுகிறது.

அடுத்து என்ன அராஜம் என்பதை சொல்லி விடுங்கள். 

உங்களுக்கு ஓட்டு போட்ட மூடர்கள் செய்த தவறால் ஒட்டு மொத்த தேசமும் அழிந்து கொண்டிருக்கிறது. 

1 comment:

  1. தப்பித்தவறி இந்திய விடுதலைக்கு என்ன செய்தீர்கள் என கேட்டுவிடாதீர் டன் கணக்கில் மன்னிப்பு கடிதம் வரும்.

    ReplyDelete