Sunday, January 2, 2022

வாசிப்புக் கணக்கு - மிகவும் குறைவு

 


போன வருடத்து வாசிப்புக் கணக்கு. கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த வருடம் வாசித்த நூல்களும் பக்கங்களும் மிகக் குறைவு.

கொரோனா உண்டாக்கிய சோர்வு ஒரு முக்கியக் காரணம். பெரும்பாலும் படிப்பது பயணங்களில்தான். கொரோனாவுக்குப் பின்பு கார் புறப்பட்ட உடனேயே "தூக்கம் என் கண்களை தழுவிக் கொண்டு விடும்" 

இந்த வருடம் வெண்மணி சென்ற போதுதான் அந்த பலவீனத்தை வெல்ல வேண்டும் என்ற உறுதியோடு தூக்கத்தை துரத்தி விட்டு 

தோழர் கருப்பு கருணாவின் நினைவைத் தாங்கி வந்த
"வர முடிந்தால் வந்து விடுங்கள் தோழர்"

தோழர் இரா.முருஜவேளின் "புனை பாவை" 

இரண்டையும் படித்து முடித்தேன். 2022 வழக்கமான வாசிப்பு ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையும் கிடைத்தது.

இதோ பட்டியல்.

இதில் "ஜிந்தாபாத், ஜிந்தாபாத்" "ஆயுத எழுத்து" இரண்டும் மீண்டும் படித்தவை. முன்னாள் புலியும் இந்நாள் எழுத்தாளருமான சாத்திரியிடம் சில நாதக தம்பிகள் "விடுதலைப் புலிகள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?" என்று சண்டை போட்டதே ஆயுத எழுத்தை மீண்டும் படிக்க வைத்தது. ஃபிடல் கேஸ்ட்ரோவின்  "வரலாறு என்னை விடுதலை செய்யும்" போலவே சோர்வுற்ற தருணத்தில் உற்சாகம் கொடுப்பது "ஜிந்தாபாத், ஜிந்தாபாத்"




2 comments:

  1. வாழ்த்துக்கள் தோழர்!

    2022-ல் பத்தாயிரம் பக்கங்களை தாண்ட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. 2016 ல் 18,000 பக்கம் என்ற அளவில் இருந்தது, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடந்த ஆண்டு 7500 என்று குறைந்தது. சென்ற ஆன்டு மிகவும் குறைந்து விட்டது

      Delete