Thursday, January 20, 2022

அப்போ அமித்ஷா மகனுக்கும் ?????

 


நேற்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்துள்ளது.

அதன் படி மாநிலத்தில் உள்ள அனைத்து விளையாட்டு அமைப்புக்களிலும் தலைவர், துணைத்தலைவர், செயலாளர் போன்ற பதவிகளில் விளையாட்டு வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டும், அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் இருக்கக் கூடாது என்பது அந்த தீர்ப்பின் சாராம்சம்.

இதை அப்படியே அகில இந்திய அளவில் விரிவு படுத்தினால் என்ன ஆகும்?

உண்மையிலேயே விளையாட்டு உலகம் உருப்படும்.

ஆனால் சாத்தியமாகுமா?

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் பதவியிலிருந்து அமித்ஷா மகன் ஜெய்ஷா வெளியேற வேண்டும்.

நடக்குமா?

ஏன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்குக் கூட இந்தியா சிமெண்ட்ஸ் சீனுவிடமிருந்து கூட விடுதலை கிடைக்காது. 

இதுதான் யதார்த்தம், துயரமான யதார்த்தம்.


பிகு: மன்மோகன்சிங் காலத்தில் விளையாட்டு அமைப்புக்களை முறைப்படுத்த ஒரு மசோதா ஒன்றை அப்போதைய அமைச்சர் அஜய் மக்கான் முன்மொழிய அமைச்சரவை நிராகரித்து விட்டது.

11 வருடங்களுக்கு முன்பு எழுதிய அந்த பதிவின் இணைப்பு கீழே உள்ளது. அதையும் கொஞ்சம் படித்து விடுங்கள்.

எலேய், எங்களோடயே விளையாடறியா? என்ற பதிவின் இணைப்பு இது . .


No comments:

Post a Comment