இரண்டு மூன்று நாட்கள் முந்தைய நாளிதழ்களை அடுக்கி வைக்கும் போதுதான் நிதிஷ் கட்சியை உபி யில் பாஜக கூட்டணி ஆட்டத்திற்கு சேர்த்துக் கொள்ளாததால் புலம்பியதை படித்தேன்.
“பழைய நெனப்புடா பேராண்டி, பழைய நெனப்புடா” என்று மட்டும்தான் நிதிஷ்குமாரின் கட்சி ஆட்கள் பாடவில்லை. மற்றபடி புலம்பலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.
வாஜ்பாய் காலத்தில் பாஜகவோடு கூட்டணி வைத்துக் கொண்ட முதல் கட்சி நாங்கதான். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகவே எங்கள் கட்சித்தலைவர் ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ்தான் தெரியுமா! அப்படிப்பட்ட எங்களைப் போய் கூட்டணியில் இணைத்துக் கொள்ளவில்லையே என்று புலம்பியுள்ளார் கே.சி.தியாகி எனும் அக்கட்சித் தலைவர்.
இவ்வளவு புலம்புகிறார்களே, ஒரு வேளை ரோஷப்பட்டு உங்கள் தயவோடு ஒன்றும் பீகாரில் நான் முதலமைச்சராக இருக்க வேண்டியதில்லை என்று நிதீஷ்குமார் ராஜினாமா செய்வாரா?
அப்படியெல்லாம் எதுவும் நடக்காது.
மோடியுடன் கூட்டணி வைத்த போதே வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை ஆகியவற்றைத்தான் அடமானம் வைத்து விடுகிறார்களே!
No comments:
Post a Comment