Thursday, January 20, 2022

ஒரு திணறல்- எத்தனை பாட்டு !

 


இது ஒரு ஜாலியான பதிவு.

 டெலி ப்ராம்ப்டர் பழுது காரணமாக பேச்சு தடைபட்டு மோடியிடமிருந்து காற்று மட்டும் வந்த தருணத்தை நினைவு கூறும் விதமாக ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர், இரண்டு முக நூல் பதிவுகளில் இரண்டு பாடல் வரிகளை எழுத, அதற்கு எத்தனையெத்தனை பாடல் வரிகள் பின்னூட்டமாக வந்தது தெரியுமா?

 அத்தனையையும் இங்கே தொகுத்து தந்துள்ளேன்.

 சுவாரஸ்யமான ஒன்று என உறுதியளிக்கிறேன். மோடியின் மாண்பு இங்கே குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது என்பதை மட்டும் ஆட்டுக்காரரிடம் அவசியம் சொல்லி விடவும்.

 தோழர் விஜயசங்கரின் பதிவுகள்


 ஐயையய்யோ… அடுத்தது என்ன? 

மறந்து போச்சே…


வாயிருந்தும்….
சொல்வதற்கு…
வார்த்தையின்றி… தவிக்கிறேன்

பின்னூட்டங்கள்.

கிளியைப் புடிச்சு கூண்டில் அடைத்து பாடச் சொல்லுகிற உலகம்..


வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று
வசப்படவில்லையடி...
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும்
உருளுதடி...

கண்மணியே பேசு, மௌனம் என்ன கூறு 

உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது, 
அதை 'பேச' நினைக்கையில் வார்த்தை முட்டுது

மெளனமான நேரம்...

ஊமை நெஞ்சின் ஓசைகள்
காதில் கேளாதோ?

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

பொத்தி வச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இன்ப துன்பம் யாரால !!! 
கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு தயக்கம்
ஏன் எனக்கு இந்த உறக்கம்

மௌனமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும் .

ஊமைப்பெண்ணொரு கனவு கண்டாள்,
அதை உள்ளத்தில் வைத்தே வாழ்ந்திருந்தாள்

நீ... சொல்லாவிடில்.. யார்.... சொல்லுவார் நிலவே..



3 comments:

  1. சொல்லாதே யாரும் கேட்டால்

    ReplyDelete
  2. சொல்லாமதானே மனசு தவிக்குது

    ReplyDelete
  3. Sangi mangi sangi mangiyae. . .

    ReplyDelete