Sunday, January 23, 2022

சுவையான காலிஃப்ளவர் பொறியல் செய்ய

 


கொஞ்சம் இடைவெளிக்குப் பின்பொரு சமையல் முயற்சி. மகனிடமிருந்தும் மனைவியிடமிருந்தும் பாராட்டு பெற்ற முயற்சி.

நேற்று வாங்கி வந்த ஒற்றை காலி ப்ளவரை பொறியல் செய்யச் சொன்னான் மகன். அது குழைந்து போகாமல் இருக்க வேண்டும் என்று நிபந்தனை வேறு.

அந்த சவாலை ஏற்று செய்த செய்முறை இங்கே.

எப்போதும் போல காலிப்ளவர் துண்டங்களை கொதிக்கும் நீரில் மஞ்சள் பொடி, உப்புப் பொடியோடு சிறிது நேரம் மூழ்க வைத்தேன்.

பிறகு அதனை நன்கு வடி கட்டி ஒரு வாணலியில் எண்ணெய் வைத்து பொறித்து தனியாக வைத்துக் கொண்டேன்.



காலிஃப்ளவருக்கு சுடு நீர் குளியல் நடந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு தக்காளியையும் வெங்காயத்தையும் வெட்டி வைத்துக் கொண்டிருந்தேன்.




வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகை போட்டு அது பொறிந்ததும் பாதி உளுத்தம் பருப்பையும் போட்டு அதுவும் நன்கு வறுபட்டதும் வெங்காயத்தை நன்கு வதக்கி பிறகு தக்காளியையும் நன்கு வதக்கி அதன் பின்பு மிளகாய்ப் பொடியையும் உப்பையும் போட்டு கொஞ்ச நேரம் கழித்து பொறித்து வைத்த காலிஃப்ளவரையும் போட்டு வதக்கினேன்.

கொஞ்சம் எண்ணெய் இருந்த காரணத்தால் கடலை மாவை தூவி, பெருங்காயத் தூளையும் தூவி நன்றாக கிளறி எடுத்தால் 

சுவையான காலிஃப்ளவர் பொறியல் தயார்.

இதில ஒரு தொழில் ரகசியம் என்னவென்றால் காலிஃபளவர் சின்னதாக இருந்ததால் பொறியலின் அளவு போதுமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வெங்காயமும் தக்காளியும். 

No comments:

Post a Comment