Wednesday, January 12, 2022

சங்கிக் கரடிகளில் ஒன்றே . . .

 


ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொழிற்சங்க அமைப்பாக இருக்கிற பி.எம்.எஸ் அமைப்பின் பொதுச்செயலாளரே, மோடி அரசை விமர்சிக்கிறார் என்றால் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம்.

 

*நாளொரு கேள்வி: 12.01.2021*

 

தொடர் எண்: *591*

 

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *.சுவாமிநாதன்*

##########################

 *உள்ளுக்குள் எழும் குரலும் நாடகக் காட்சியா?*

 கேள்வி: பொருளாதார சீர் திருத்தங்கள் எல்லாம் உழைப்பாளி மக்களின் நன்மைக்கே என்கிறது அரசாங்கம். ஆனால் இந்திய தொழிலாளர்கள் பிப்ரவரி 23, 24 இல் வேலை நிறுத்தம் என்று அறிவித்துள்ளார்களே!

 *.சுவாமிநாதன்*

 உலகமய பொருளாதார பாதை உழைப்பாளி மக்களின் நலனுக்கே என்கிற *பழைய ரிக்கார்டில் கீறல்* விழுந்து விட்டது. வாழ்க்கை அனுபவங்கள் உழைப்பாளி மக்களை இவர்கள் அழைத்து செல்வது தங்களுக்கான பாதை அல்ல என்பதை உணர துவங்கி விட்டனர். ஆகவேதான் எதிர் வரும் பிப்ரவரியில் நடைபெறப் போகும் வேலை நிறுத்தங்கள் மக்களின் கவனத்தை, ஆதரவை ஈர்ப்பதாக உள்ளது. கடந்த சில அகில இந்திய வேலை நிறுத்தங்களிலும் தொழிற் சங்க இயக்கத்தின் பலத்தையும் விஞ்சி தன்னெழுச்சியாக தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றது பல மாநிலங்களில் நடைபெற்றது

 இதோ ஓர் குரல் உள்ளுக்குள் இருந்து கேட்கிறது பாருங்கள். சங் பரிவாரின் கட்டுப்பாட்டில் இயங்குகிற தொழிற் சங்க அமைப்புதான் பாரதீய மஸ்தூர் சங் (பி.எம்.எஸ்). அதன் பொதுச் செயலாளர் பினாய் குமார் சின்கா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளியிட்டுள்ள கருத்து இது. (பைனான்சியல் எக்ஸ்பிரஸ் - ஜூலை 20, 2021). 

 " _பல காரணங்களினால், நாடு பல எரியும் பிரச்சினைகளை எதிர் கொண்டும் கூட, 6 ஆண்டுகளாக முத்தரப்பு சந்திப்பான 'இந்தியன் லேபர் கன்வென்சன்' (ILC) கூடவில்லை._ "

 *எது எது எரியும் பிரச்சினைகள்* என்றும் அவர் குறிப்பிடுகிறார். புலம் பெயர் தொழிலாளர், அமைப்பு சாரா தொழிலாளர், தொழிலாளர் சட்டத் திருத்தங்கள், வேலை இழப்புகள், ஊதிய வெட்டு ஆகியன அதிக கவலை தருகின்றன என்கிறார். 2015 இல் தான் கடைசியாக .எல்.சி கூட்டம் நடைபெற்றது. ஒவ்வோராண்டும் இந்த சந்திப்பு நடந்திருக்க வேண்டும்.

 " _தொழிலாளர் பிரச்சினையில் அரசு காட்டுகிற முனைப்பை, கள நிலமைகள் பற்றிய உண்மை நிலைமையை எடுத்துரைக்கிற சரியான அளவு கோள்கள் இந்த சந்திப்புகளில்தான் அரசுக்கு கிடைக்கும்_ ."  

 என்றும் அக்கடிதம் அரசிடம் மன்றாடுகிறது. ஆறு ஆண்டுகள் ஆகி விட்டது என்ற இக் கடிதம் எழுதப்பட்டு இன்னொரு 6 மாதங்கள் ஓடி விட்டன

 இதோ அக்டோபர் 18, 2021 இல் அதே பி.எம்.எஸ் தலைவர் "யு.என்." செய்தியின்படி

 " _அரசின் எல்லா பணமாக்கல், தனியார் மயம், நிறுவனமயம் தொடர்பான நடவடிக்கைகளை எதிர்க்கிறோம். அரசு எல்லா ஜனநாயக நெறிகளின் எல்லைகளையும் மீறுகிறது. தொழிற்சங்க இயக்கத்திற்குள் கட்டு மீறலை (Anarchy) உருவாக்குகிறது_ " 

 இதை விட கடுமையான வசனம் வேறு எதுவும் இருக்க முடியுமா? இப்படி பேசியும் 3 மாதங்கள் கழிந்து விட்டன

 இதோ அதே தலைவர்  பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் தி இந்து ஆங்கில  நாளிதழில் (08.01.2021).

  பிரதமரை, அமைச்சர்களை அணுகுகிற முயற்சி வெற்றி பெறவில்லை. அரசுக்கு *"உழைப்பாளி மக்களுக்காக உழைக்கிற எண்ணம் இல்லை"* ஆகவே *"போராடுவதை தவிர"* வேறு வழியில்லை; அரசின் தனியார் மயம், பங்கு விற்பனை, நிறுவன மயம், கேந்திர விற்பனை, பணமாக்கல் ஆகியன மூலமாக பொதுத் துறை மீது தாக்குதல் தொடுப்பதை எதிர்ப்போம்

 இத்தோடும் அக்கடிதம் நிற்கவில்லை

 " _அரசு ஊழல் அதிகார வர்க்கத்திடம் இருந்தும், உள் லாபம் கொண்ட ஆலோசகர்கள் இடமிருந்தும் விலகி நிற்கா விட்டால் போராட்டம், எதிர்ப்பியக்கங்கள் என்கிற பாதையில் செல்வோம் என்பதில் விதையளவும் சந்தேகம் தேவையில்லை_ "

 அது பொதுத் துறை நிறுவனங்களின் கேந்திர விற்பனை, ரயில்வே - பாதுகாப்பு நிறுவனங்களின் தனியார் மய முயற்சிகள், வங்கி இணைப்பு, எல்..சி பங்கு விற்பனை ஆகியவற்றை எல்லாம் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளது

 *இது உள்ளத்தின் குரல் என்று சொல்லாவிட்டாலும் உள் குரல் என்பது முக்கியமானது.* ஆனால் இந்த குரலே அரசின் செவிகளில் விழவில்லை அல்லது விழுந்தும் எந்த நகர்வும் இல்லை

 பிப்ரவரி மாதம் போராட்ட திட்டம் அறிவிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். 6 மாதம்... 3 மாதம்... 1 மாதம்... உண்மையிலேயே இது கவுன்ட் டவுனா?  அவ்வளவு வெப்பம் இருப்பதால் களத்திற்கு வர வேண்டிய *கட்டாயமா?* இல்லை வெறுமனே நானும் களத்தில் இருக்கிறேன் என்ற *பாவனையா?*

 களத்திற்கு வருவதென்றால் கரங்கள் தட்டி வரவேற்போம்

 எப்படி இருப்பினும் பி.எம்.எஸ் வார்த்தைகள் ஒன்றை தெளிவாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதுஅரசாங்கத்தின் அழிவுப் பாதையை *சகோதர அமைப்புகளாலேயே சகிக்க முடியவில்லை* என்ற உண்மையை... இதை விட பிப்ரவரி வேலை நிறுத்தத்தின் நியாயத்திற்கு சாட்சியம் வேண்டுமா!

 *செவ்வானம்*

 

No comments:

Post a Comment