மோடிக்கு
எதெல்லாம் தெரியாது?
மூத்த
வழக்கறிஞர் தோழர் ஞானபாரதி அவர்களின் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன். மோடிக்கு எதுவெல்லாம்
தெரியாது என்று அவர் பிரித்து மேய்ந்துள்ளார். மோடிக்கு என்னவெல்லாம் தெரியும் என்று
தனியாக ஒரு பதிவெழுதலாம் என்று சிந்திக்கிறேன்.
என்ன! மோடிக்கு வாக்களித்த மூடர்களுக்குத்தான் இவையெல்லாம் புரியுமா என்று தெரியவில்லை. .
மோடிக்கு பொருளாதாரம் பற்றி ஒரு சுக்கும் தெரியாது என்பதை நேற்று உலகிற்கு டெலிபுராம்ப்டர் காட்டிக் கொடுத்தது.
வரலாறு தெரியாது என்பதை மோகன் தாஸ் கரம் சந் காந்தி என்று கூட சொல்லத் தெரியாமல் மோகன் லால் காந்தி என்று சொல்வது காட்டிக் கொடுத்தது.
சுதந்திரப் போராட்ட வரலாறு பற்றி ஒன்றுமே தெரியாது என்பதை. வ.உ.சியையும் மருதிருவரையும் பாரதியையும் வேலுநாச்சியாரையும் நிராகரித்தது காட்டிக் கொடுத்தது.
கருத்துச் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாது என்பதை குழந்தைகள் நாடகத்தை ஒளிபரப்பிய டீவிக்கு அமைச்சகத்தில் இருந்துநோட்டீஸ் அனுப்பியது காட்டிக் கொடுத்தது.
மனிதாபிமானம் என்றால் என்னவென்று தெரியாது என்பதை 4 மணி நேர இடைவெளியில் பொதுமுடக்கம் அறிவித்தும் பல நூறு கிலோமீட்டர் நடந்து பரிதவித்த புலம்பெயர் தொழிலாளர்களின் துயரக் கதைகள் காட்டிக் கொடுத்தது.
விவசாயம் பற்றி எதுவும் தெரியாது என்பதை விவசாயிகளின் ஓராண்டு போராட்டத்திற்குப் பின்பு வேளாண்சட்டங்களை வாபஸ் வாங்கியதுகாட்டிக் கொடுத்தது.
.தொற்று நோய் பற்றி ஒன்றும்தெரியாது என்பதை சுப்ரீம் கோர்ட் குட்டு வைத்த பின்பு தான் தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாகப் போட ஒப்புக் கொண்டதுகாட்டிக் கொடுத்தது.
தேசநலன் பற்றி எதுவும் தெரியாது என்பதை பொதுத்துறை நிறுவனங்களை பெருமுதலாளிகளுக்கு அடிமாட்டு விலையில் தாரை வார்த்ததுகாட்டிக்கொடுத்தது.
மக்கள் நலன் பற்றி எதுவும் தெரியாது என்பதை பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை காட்டிக் கொடுக்கின்றது.
வெளியுறவுக் கொள்கை என்பது பற்றி எதுவும் தெரியாது என்பதை சீனம் அண்டைநாடுகளை தன் தோழமை நாடுகள் ஆக்கிய போது இந்தியா மட்டும் தனிமரமாய் நிற்பது காட்டிக் கொடுத்தது.
கருணை என்றால் என்ன என்பது தெரியாது என்தை ஸ்டேன் சாமிக்கு டம்ளர் கூட கொடுக்காமல் கொன்றது காட்டிக் கொடுத்தது.
தேசியப் பாதுகாப்பு பற்றி எதுவும் தெரியாது என்பதை லடாக்கும் அருணாசல பிரதேசமும் சீனத்தின் வசம் இருப்பது காட்டி கொடுத்தது.
ஆட்சிக்கலைஎன்பது பற்றி எதுவும் தெரியாது என்பதை பட்டினியால் வாடுவோர் அதிகமுள்ளநாடு என்ற இழிச்சொல் காட்டிக் கொடுக்கிறது.
தொழில் வளர்ச்சி பற்றி எதுவும் தெரியாது என்பது தொடர்ந்து ஜிஎஸ்டி வரியை உயர்த்தி தொழில் துறையை அழிப்பது காட்டிக் கொடுக்கிறது.
நேர்மை என்றால் என்னவென்று தெரியாது என்பதை ரபேலும் பிஎம்கேரும் காட்டிக் கொடுக்கின்றன.
எளிமை என்றால் என்ன என்பது தெரியாது என்பதை தினம்உண்ணும் தைவான் காளானும் வேளைக்குஒன்றாய் உடுத்தும் உடையும் ஆடம்பரமான காரும் அட்டூழிய விலையில் வாங்கிய விமானமும் காட்டிக் கொடுக்கின்றன.
இவ்வளவும் தகுதியும் தரமும் இல்லாத நபரை பிரதமர் நாற்காலியில்உட்கா வைத்து விட்டோம் என்பதை மக்களுக்குக் காட்டிக் கொடுக்கிறது..
குடியரசு தின விழா நிகழ்ச்சியின் ஒரு நிகழ்வாக படைகள் பாசறை திரும்பும்போது ஒலிக்கப்படும் ' என்னுடன் இணைத்திருங்கள் ' என்ற மகாத்மாவிற்கு பிடித்த பாடலை நீக்கியுள்ளனர்.
ReplyDelete