வாட்ஸப்பில்
வந்த செய்தி கீழே உள்ளது. இது வரை நான்கு பேரிடமிருந்து வந்து விட்டது.
ஆஹா,
இது என்ன அற்புதம் என்றெல்லாம் இன்ஸ்டன்டாக வியக்காதீர்கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள
பனிரெண்டு நாட்களில் இரண்டு நாட்கள் மட்டுமே வெள்ளிக்கிழமை. இந்த செய்திக்கு ஒரு முக்கியத்துவம்
கொடுக்க ஒரு ஓம் சிம்பல் வேறு.
எந்த
செய்தியை அனுப்பினாலும் அதை பார்வேர்ட் செய்வதற்கு நாலு பேர் இருந்தால் ஏப்ரல் முதல்
நாள் மட்டுமல்ல, எல்லா நாள்களுமே முட்டாள் தினம்தான்.
இது
பரவாயில்லை மொக்கை செய்திதான். ஆனால் பிரிவினையைத் தூண்டுகிற ஏராளமான
தவறான செய்திகள் வேண்டுமென்றே பரப்பப் படுகின்றன. பாஜக அதற்காகவே ஐ.டி செல்
என்று தனியாக வைத்துள்ளது.
வந்த
அனைத்தையும் அப்படியே பார்வேர்ட் செய்வது என்ற வியாதி நம்மை பீடித்தால் ??????
எப்பொருள்
யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்மெய்ப்
பொருள் காண்பதறிவு என்ற
குறளை வாட்ஸப்பில் வந்த செய்தியை பார்வேர்ட் செய்வதற்கு முன்பாக நினைத்து, நிற்க அதற்குத் தக.
கேட்பவர்கள் கேனையாக இருந்தால்
ReplyDeleteகேப்பயில் நெய் வடியும்