Wednesday, January 5, 2022

அவங்க ஏன் முக்கியம்?

அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் மோடி அரசின் முடிவு எவ்வளவு மூடத்தனமானது என்பதையும் பாதிப்பு யாருக்கு என்பதையும் வங்கி ஊழியர் இயக்கத்தின் முக்கியத் தலைவர் தோழர் சி.பி.கிருஷ்ணன், விளக்கி உள்ளார். அவசியம் முழுமையாக படிக்கவும்.


 *நாளொரு கேள்வி: 03.01.2022*


தொடர் எண்: *582*

இன்று நம்மோடு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (BEFI) தமிழ் மாநில துணைத் தலைவர் *சி. பி. கிருஷ்ணன்*
##########################

*என்ன வித்தியாசம்?*

கேள்வி : அரசு வங்கிகளுக்கும், தனியார் வங்கிகளுக்கும் என்ன வித்தியாசம்?

*சி. பி. கிருஷ்ணன்*

நிறைய வித்தியாசங்கள். ஒவ்வொன்றாக பார்ப்போம். 

12 பொதுத்துறை வங்கிகள் ஒருபுறமும்,

22 தனியார் வங்கிகள், 3 பிரதேச
தனியார் வங்கிகள், 10 சிறிய தனியார் வங்கிகள், 7 பேமெண்ட் வங்கிகள், 46 வெளிநாட்டு வங்கிகள் மறு புறமும் நம் நாட்டில் உள்ளன. 

*அரசு வங்கிகளில்* உள்ள மொத்த
பங்குகளில் மத்திய அரசின் பங்கு
51%க்கு குறையாமல் இருக்க
வேண்டும் என்பது சட்டம். எனவே
மத்திய அரசின் முழு உத்தரவாதம்
உள்ளதால் திவாலாகாது

1947 முதல் 1969 வரை 559 *தனியார் வங்கிகள்* திவாலாகி மக்களின் வைப்புத் தொகை பெருமளவில் பறிபோனது, 1969க்கு பிறகு 38 தனியார் வங்கிகள் திவாலாகின*

*அரசு வங்கிகளில்* போடப்படும் வைப்பு தொகைக்கு முழுமையான பாதுகாப்பு உண்டு.

*தனியார் வங்கிகளில்* அதிகபட்சமாக ஒரு கணக்குதாரருக்கு ரூ. 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே டிஐசிஜிசி காப்பீட்டு பாதுகாப்பு உண்டு.

மொத்த கிளைகளில் 33% *அரசு வங்கி கிளைகள்* கிராமப்புறங்களில் உள்ளன.

மொத்த கிளைகளில் 15% *தனியார் வங்கி* கிளைகள் மட்டுமே கிராமப்புறங்களில் உள்ளன.

*அரசு வங்கிகள்* நாட்டின் அடிப்படை கட்டுமான வளர்ச்சிப் பணிகளுக்கு பெருமளவில் நிதி ஆதாரம் வழங்குகின்றன.

*தனியார் வங்கிகள்* நாட்டின் அடிப்படை கட்டுமான வளர்ச்சிப் பணிகளுக்கு அநேகமாக நிதி வழங்குவதில்லை.

*அரசு வங்கிகளில்* எந்தவித பிணையில்லாமல், சொத்து அடமானம் இல்லாமல் ரூ.2 லட்சம் வரை குறுந்தொழில் கடன், ரூ. 3 லட்சம் வரை விவசாயக் கடன், ரூ. 4 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

*தனியார் வங்கிகளில்* அவ்வாறு வழங்கப்படுவதில்லை

*அரசு வங்கிகளில்* மொத்த கடனில் 40% வரை ஏழை மக்களுக்கான முன்னுரிமைக் கடனாகவும், அதில் 18% விவசாயக் கடனுக்காக உள் ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது.

*தனியார் வங்கிகளில்* அப்படி ஒரு வரையறை இல்லை. முன்னுரிமைக் கடன் வழங்கும்  நிறுவனங்களின் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. 

ஏழை மக்களுக்கான 44.17 கோடி பிரதம மந்திரி ஜன்தன் கணக்குகளில் 42.89 கோடி கணக்குகள் (97.1%) *பொதுத்துறை வங்கிகளால்* திறக்கப்பட்டிருக்கின்றன. 

ஏழை மக்களுக்கான 44.17 கோடி பிரதம மந்திரி ஜன்தன் கணக்குகளில் 1.28 கோடி கணக்குகள் (2.9%) மட்டுமே *தனியார் வங்கிகளால்* திறக்கப்பட்டிருக்கின்றன.

ஊரடங்கு காலத்தில் ஜன்தன் கணக்குகள் மூலமாக ஏழை பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 31000 கோடியில், சுமார் ரூ.30000 கோடி *அரசு வங்கிகளால்* வழங்கப்பட்டன.

ஊரடங்கு காலத்தில் ஜன்தன் கணக்குகள் மூலமாக ஏழை பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 31000 கோடியில், சுமார் ரூ.1000 கோடி மட்டுமே *தனியார் வங்கிகளால்* வழங்கப்பட்டன.

வங்கித்துறையின் மொத்த வியாபாரத்தில் *அரசு வங்கிகளின்* பங்கு சுமார் 65% அளவிற்கு இருந்தாலும், மொத்த வாடிக்கையாளர்களில் சுமார் 94%ஐ தனனகத்தே கொண்டுள்ளன.

வங்கித்துறையின் மொத்த வியாபாரத்தில் *தனியார் வங்கிகளின்* பங்கு சுமார் 35% அளவிற்கு இருந்தாலும், மொத்த வாடிக்கையாளர்களில் சுமார் 6%ஐ மட்டுமே தனனகத்தே கொண்டுள்ளன.

*அரசு வங்கிகளில்* அதிக பட்சமாக வசூலிக்கப்படும் வட்டி 12.5% ஆகும். 

*தனியார் வங்கிகளில்* அதிக பட்சமாக வசூலிக்கப்படும் வட்டி 26% ஆகும்.

*அரசு வங்கிகள்* வெளிப்படைத்தன்மை படைத்தவை. இவை தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு உட்பட்டவை. அரசு வங்கிகளின் மீது அரசியல் நிர்ணயச் சட்டத்தின்படி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும்.

*தனியார் வங்கிகள்* வெளிப்படைத்தன்மை இல்லாதவை. தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு உட்படாதவை. தனியார் வங்கிகள் மீது அரசியல் நிர்ணயச் சட்டத்தின்படி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது.

*அரசு வங்கிகளின்* உயர் அதிகாரிகள் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் கண்காணிப்புக்கு உட்பட்டவர்கள்.

*தனியார் வங்கிகளின்* உயர் அதிகாரிகள் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் கண்காணிப்புக்கு உட்படாதவர்கள்.

*அரசு வங்கிகளில்* பணி நிரந்தரம் உள்ளது.

*தனியார் வங்கிகளில்* பணி நிரந்தரம் கிடையாது.

*அரசு வங்கிப்* பணியாளர்கள் நியமனத்தில் தலித், ஆதிவாசி, பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவ வீரர், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கான இட ஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படுகிறது

*தனியார் வங்கிப்* பணியாளர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதில்லை. 

*செவ்வானம்*

No comments:

Post a Comment