இவையெல்லாம்தான்
சுதந்திரப் போராட்டமா மோடி?
சுதந்திரப்
போராட்டம் என்பதுதான் இந்தாண்டு குடியரசு தின ஊர்வலத்தில் அலங்கார ஊர்திகளுக்கான கருப்பொருள்
என்று சொல்லி இருந்தது மோடி அரசு.
12
மாநிலங்கள் மற்றும் பல அரசுத்துறைகளின் அலங்கார ஊர்திகள் பவனி வந்தன.
ஊர்தியின்
கருப்பொருள் என்ன என்பதை தூர்தர்ஷன் ஒளிபரப்பியது.
எந்தெந்த
ஊர்தி என்ன கருப்பொருளை சொன்னது என்று பார்ப்போம்.
மேகாலயா - பெண்கள்
முன்னேற்றம்
உத்தரப்
பிரதேசம் – விஸ்வநாதர் கோயில்
உத்தர்கண்ட் -
கோவா - பாரம்பரியம்
சத்திஸ்கர்
– பசு மாட்டின் பலன்கள்
மகாராஷ்டிரா
– பல்லுயிர்களின் பெருமை
குஜராத் - ஆதி வாசிகளின் போராட்டம்
ஹரியானா
– விளையாட்டில் முதலிடம்
இதிலே
பஞ்சாப், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களின் ஊர்திகள்தான் சுதந்திரப் போராட்டத்தை சொன்னது.
குஜராத் ஊர்தியும் ஆதிவாசிகளின் போராட்டத்தை சொல்வதாகத்தான் இருந்தது. ஆனால் அந்த வரலாற்றை
முதன் முதலில் சொன்னது மோடி என்பதுதான் கொஞ்சம் உதைக்கிறது. நேதாஜி 125 என்ற ஊர்தியைக்
கூட சுதந்திரப் போராட்டமாக எடுத்துக் கொள்ளலாம். அரவிந்தர் பற்றிய ஊர்தியோ அவரது ஆன்மீகத்தைப்
பற்றித்தான் சொல்லியது.
எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லையென்று நிராகரிக்கப்பட்ட ஊர்த்திகளுக்கு விளக்கம் அளித்துவிட்டாரே ஒன்றிய அமைச்சர், "எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்று"
ReplyDelete