மாறு வேடப் போட்டியில் கலந்து கொள்வது போன்ற தோற்றத்துடன் கானகத்து வீரன் பிர்ஸா முண்டாவின் வேடத்தில் காட்சியளித்துள்ளார் உலக மகா நடிகன் நரேந்திர மோடி.
இன்றைய ஜார்கண்ட் மாநிலத்தின் இயற்கை வளங்களை சுரண்ட நினைத்த பிரிட்டிஷாருக்கு எதிராக போராடி 25 வயதில் இறந்து போன பழங்குடி இன வீரன் பிர்ஸா முண்டா.
“மண்ணும் நமது,
நீரும் நமது,
காடும் நமது”
என்பதுதான் பிர்ஸா முண்டாவின் முழக்கம். அதற்காகத்தான் மக்களைத் திரட்டி போராடினான்.
பிரிட்டிஷ் போலீஸுக்கு பிர்ஸா முண்டா என்றால் அவ்வளவு பயம். தங்கள் மண்ணை அடுத்தவர் அபகரிக்கக் கூடாது என்று போராடிய வீரனைப் போல் வேடமணிந்தால் மோடி தேச பக்தனா என்ன?
இந்த தேசத்தின் செல்வங்களை உள்நாட்டு, பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கு விற்கும் மோடிக்கு பிர்ஸா முண்டாவின் பெயரை உச்சரிக்கக் கூட அருகதை இல்லை.
ஒரு வேளை பிர்ஸா முண்டா இன்று உயிரோடு இருந்திருந்தால் அவனது வில்லில் இருந்து அம்பு மோடி மீதுதான் பாய்ந்திருக்கும்.
பிகு: பெங்காலி எழுத்தாளர் மஹாஸ்வேதாதேவி எழுதிய "காட்டில் உரிமை" நூல் கிடைத்தால் அவசியம் படியுங்கள். பிர்ஸா முண்டாவின் வீரஞ்செறிந்த போராட்டம் புரியும். மோடி போன்ற போலிகள் பிர்ஸா முண்டாவின் நிழலைக் கூட நெருங்க அருகதையற்ற ஜென்மம் என்பதும்.
அந்த நாவல் என்னிடம் உள்ளது.நான் படித்துள்ளேன்.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteFancy dress competitionla mutual modiyai jeyikka mudiyaathu.
ReplyDelete