கடந்த மாதத்தில் ஈ.சி.ஆர் ரோட்டில் ஒரு நிகழ்வு. அதை முடித்து புறப்படும் போதுதான் மாமல்லபுரம் அங்கிருந்து பதினைந்து கிலோ மீட்டர்தான் என்பது தெரிந்தது. அங்கே போய் வரலாம் என்று முதலில் போன இடம் அர்ஜூனன் தவம் செய்யும் பாறை.
அங்கேதான்
டிஜிட்டலைசேஷன் பிரச்சினை வந்தது.
QR
Code கொடுத்து பணம் செலுத்த சொல்லி அறிவிப்பு இருந்தது. பேடிஎம் இல்லையென்றால் அது
வேலை செய்யாதாம்.
பேடிஎம்
உள்ள தொலைபேசியிலிருந்து முயற்சி செய்தால் ஏதோ தேர்தலில் வாக்களிக்கப் போவது போல அடையாள
அட்டை விபரங்கள் கேட்டது. பிறகு ஒவ்வொருவரின் பெயர், வயது மற்றும் விலாசம். ஒரு தொலைபேசியில்
ஐந்து பேருக்கு மட்டுமே நுழைவுச் சீட்டு எடுக்க முடியும். அந்த இணைய தளம் கேட்டபடியே
நடந்து கொண்டாலும் இறுதியில் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. பல முறை முயற்சித்தும்
பலனில்லை. இது சரிப்பட்டு வராது என்று திரும்பி விட்டோம். கம்பிகளுக்கு வெளியேயும்
கம்பிகளுக்குள் கை விட்டும் எடுத்த புகைப்படங்கள் அந்த அவஸ்தைக்கு சான்று.
தொலைபேசியே
இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?
ஆண்ட்ராய்ட்
போன் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?
(இந்த
இரண்டு பிரிவிலும் இன்னும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்)
ஆண்ட்ராய்ட்
போனிலும் டேடாவுக்கான பேலன்ஸ் இல்லாதவர்கள்,
பேடிஎம்
இல்லாதவர்கள் ஆகியோர் என்ன செய்வார்கள்?
அதே
போல அந்த இடத்தில் நெட்வொர்க் வேலை செய்யாவிட்டால் என்ன செய்வது?
டிஜிட்டல்மயம்
ஒரு புறம் இருக்கட்டும். அதற்கு வாய்ப்பில்லாதவர்களிடம் ரொக்கம் வாங்கிக் கொள்ளட்டுமே!
டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் கூட வாங்கலாம்.
தொல்லியல்
துறை உரிய நடவடிக்கை எடுக்கட்டும்.
பிகு: நரேந்திர மோடி விளம்பர தூதர் என்பதால் பேடிஎம் மட்டும்தான் என்று வைத்துள்ளார்களோ என்று ஒரு சின்ன சந்தேகம் வருகிறது.
பிகு: முட்டாள் தினத்துக்கான பதிவல்ல. அது தனியாக மாலையில்
No comments:
Post a Comment