Saturday, November 20, 2021

தேங்க் யூ புளிச்ச மாவு ஆஜான்.

 


இந்த பதிவை எழுதும் இந்த நிமிடம் வரை எனக்கு பதட்டமாகவே இருந்தது. எங்கே நாம் எழுத வேண்டிய கன்டென்டை ஆஜான் மறுத்து விடுவாரோ என்று.

 ஆஜான் எழுதிய கட்டுரைகளை விட, நாவல்களை விட, சிறுகதைகளை விட மிகுந்த கலக்கம் தரக்கூடியது அவரது அஞ்சலிக் குறிப்புகளே!

 அநேகமாக அவருடைய அனைத்து அஞ்சலிக் குறிப்புக்களுக்காகவும் அவர் கழுவி கழுவி ஊற்றப்பட்டுள்ளார். அதிலும் அசோகமித்திரன் இறந்து போன போது அவர் எழுதியது ஆஜான் எவ்வளவு கேவலமானவர் என்பதை நிரூபித்தது.

 பாட்டையா பாரதி மணி, ஆஜானின் பார்வதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்தான். ஆஜான் எழுத்தின் மீது நிஜமாகவே மரியாதை கொண்டவர். வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டபோது அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்.

 ஆனாலும் அவருக்கு ஆஜான் அஞ்சலிக் குறிப்பு எதுவும் எழுத மாட்டார் என்று நான் நினைத்தேன்.

 அது போலவே அவரும் எழுதவில்லை. அவரது குண்டர் படை ஆட்கள் யாரும் கூட எழுதவில்லை.

 காரணம் தெரியுமா?

 ஒரு காரணம்

 நான் மாஸ்டர் என்று ஆஜான் பீற்றிக் கொண்ட காலத்தில் இதெல்லாம் தேவை இல்லாத அலட்டல் என்று அறிவுரை கூறியவர். 

 இதோ அந்த பதிவு. ஆஜானுக்கு எப்படி இருக்கும்!

 Let Sanity prevail!

பாவம் ஆசான்!

ஏற்கனவே பலர் பொங்கல் வெச்சு கும்மியடிக்கிறாங்ககொஞ்சம் அமைதி காத்திருக்கலாம்திருநாவுக்கரசருக்கு அஞ்சு வயசிலெ நடந்தது தனக்கு 
ஒண்ணாங்கிளாசிலெ நடந்தது என்று வாயைக்குடுக்கமக்கள் 
கர்ப்பஸ்ரீமான் மாதிரின்னு ஸ்க்ரிப்ட் எழுதறாங்கஇதெல்லாம் தேவையா?
 இப்படி எழுதுபவர்கள் எல்லோருமே உங்கள் வாசகர்கள்.....நண்பர்கள்!

நீ உன் ஏரியாவில் பெரியவன் தான்உன் படைப்புகள் சாட்சிஉன் சக 

எழுத்தாளர்களே வியக்குமளவுக்கு மாபெரும் சாதனைஅவைகள் 
பேசட்டுமேதேவையில்லாமல் முதற்கல் ஏன் எறியவேண்டும்
என் விஷயத்திலும் இது நடந்திருக்கிறதுநான் பொருட்படுத்தவேயில்லைநீ இன்னும் யாருக்கு என்ன நிரூபிக்கவேண்டும்இருக்கும் ஒரு வண்டி 
கண்ணியத்தை காப்பாற்றிக்கொள்ளத்தெரியாமல் சிறுபிள்ளைத்தனம் 
தலையெடுப்பதை தவிர்க்கவேண்டும்இந்த 'ஆண்டான்அடிமை'த்தனம் 
இப்போது காலாவதியாகிவிட்டது.

//‘மாஸ்டர்’ என்பவர் வேறு வகையானவர்அவர்கள் ஆற்றுவதை

அடைவதை பிறர் அடையமுடியாதுஆகவே அந்த ஒப்பீடே அவருக்கான 
அவமதிப்புதான்நான் நீங்கள் வாழும் தலைமுறையின் பெரும்படைப்பாளிமாஸ்டர்அதை உணரவில்லை என்றால் நீங்கள் இலக்கியத்தில் எதையுமே உணரத்தொடங்கவில்லை ,நீங்கள் வேறெங்கோ இருக்கிறீர்கள்.// 
இவை உங்கள் வரிகள்! So...what? நீங்கள் பிறரிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

You're also getting old and need some sanity! 

அவ்வப்போது வாயிலகப்படும் சொத்தைக்கடலைகள் இனி வேண்டாம்அது இல்லாமெ சாப்பிடத்தான் எங்களுக்குப்பிடிக்கும்!

உங்கள் சாதனைகளைப்பற்றி சரித்திரம் பேசட்டும்ஃபேஸ்புக் பேச வேண்டாம்

இதைச்சொல்ல என் நரைத்த தலை மட்டுமே எனது தகுதி!

Silence is Golden!


இதை விட முக்கியமான காரணம்

 ஆஜான் புளிச்ச மாவு சம்பவத்தின் போது

 “ஜெயமோகனுக்கு அடியெல்லாம் ஒன்றும் கிடையாது. வெறும் வாய்த் தகராறுதான். போலீஸ் கேஸை ஸ்ட் ராங்காக்கவே மருத்துவமனையில் அனுமதி. எனவே யாரும் கவலைப்பட வேண்டாம்”

 என்று அப்பாவித்தனமாக முக நூலில் எழுதி விட்டார்.

 அதனால்தான் ஆஜானின் அயோக்கியத்தனம் அம்பலமானது. தான் அசிங்கப் படுவதற்கு காரணமானவரை மதித்து அஞ்சலியெல்லாம் எழுத மாட்டார்

 என்ற என் மதீப்பீட்டை  நிஜமாக்கிய ஆஜானுக்கு நன்றி.

பிகு: பாட்டையா மறைந்ததற்குப் பின்னே இதுவரை 26 பதிவுகள் ஆஜான் எழுதியுள்ளார். எனவே நேரமில்லை என்றெல்லாம் கதை விட முடியும்.

 

2 comments:

  1. ஏதாவது எழுதி திட்டினா பரவாயில்லை. எழுதலைன்னு திட்டறது ரொம்ப ஓவர்

    ReplyDelete
  2. ஆசானின் கள்ள மெளனம் கண்டிக்கத் தக்கதே!

    ReplyDelete