ஏ1 ன் போயஸ் இல்லம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்த பின்பு தோன்றிய சில கருத்துக்கள்.
ஒரு ரூபாய் ஊதியத்தில் எவ்வளவு ஆடம்பரமாக வாழ முடியும் என்பதை மக்கள் நேரில் கண்டு உணரும் வாய்ப்பு போய் விட்டதே என்பதுதான் முதலில் தோன்றியது.
ஏ 1 என்ன மகாத்மா காந்தியா, ஏற்கனவே ஒரு நினைவிடம் இருக்கும் போது பல கோடி செலவு செய்து இன்னொரு நினைவிடம் அவசியமா என்று நீதிபதி கேட்டது சரியான கேள்வி என்றே தோன்றியது.
ஆமாம். இவ்வளவு பெரிய வீட்டை தீபக்கும் தீபாவும் பராமரிப்பார்களா? அந்த அளவுக்கு அவர்களிடம் பொறுமையோ நிதியோ இருக்கிறதோ? இல்லை விற்று விடுவார்களா?
அப்படி விற்றால் அது சசிகலாவிடம்தான் செல்லும் என்று ஒரு தோழர் சொன்னார். அவர் சொன்ன காரணம் கூட சரியாகவே இருந்தது. போயஸ் கார்டன் எனும் மர்ம மாளிகையில் என்னென்ன உள்ளது, எங்கே சுரங்கங்கள் உள்ளது? அதில் உள்ள பொக்கிஷங்கள் என்ன என்பதெல்லாம் அவருக்குத்தான் தெரியும். அதனால் எப்படியானாலும் அதை வாங்கி விடுவார்.
என்ன நடக்கும் என்பதை பார்க்கத்தானே போகிறோம்!
No comments:
Post a Comment