Wednesday, November 17, 2021

அரசாங்கமா இல்லை அமேசான் கம்பெனியா?


இந்தியாவில் உள்ள எல்லாவற்றையும் மோடி விற்றுக் கொண்டிருக்கிறார். அவர் அரசாங்கம் நடத்துகிறாரா இல்லை அமேசான் கம்பெனி நடத்துகிறாரா?

14.11.2021  அன்று  மதுரையில் நடைபெற்ற “எல்.ஐ.சி பங்கு விற்பனை எதிர்ப்பு மாநில சிறப்பு மாநாட்டில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு டி.கே.எஸ்.இளங்கோவன் எழுப்பிய கேள்வி இது.

மாநாட்டைப் பற்றிய தீக்கதிர் செய்தித் தொகுப்பு கீழே . . .


எல்ஐசி பங்குகளை விற்கும் முடிவைக் கைவிடுக!

மதுரை , நவ.14-  2021 பொதுத்துறையில் கடந்த 65 ஆண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிற மிகப்  பெரும் நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று அகில  இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் மதுரையில் நவம்பர் 14 ஞாயிறன்று நடை பெற்ற மாநில சிறப்பு மாநாட்டில் வலி யுறுத்தப்பட்டது .  பொதுத்துறைகளை உருவாக்கி சுதந்திர இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த இந்தியா வின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் 132 வது பிறந்த நாளையொட்டி அகில  இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் மதுரையில் மாநில அளவிலான ‘எல்ஐசி பங்கு விற்பனை எதிர்ப்பு சிறப்பு மாநாடு’ ஞாயிறன்று நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதுமிலிருந்து 200 பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட எல்ஐசி மற்றும் பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் பங்கேற்றனர் . 

மதுரைக் கோட்டத் தலைவர் ஜி.மீனாட்சி சுந்தரம் கொடியேற்றி வைத்தார் . புகைப்படக் கண்காட்சியை தென்மண்டல எல்ஐசி உழைக்கும் மகளிர் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் ஜெ.விஜயா திறந்து வைத்தார் . பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க  தென்மண்டலச் செயலாளர் ஜி.ஆனந்த் முன்மொழிய பொதுத்துறை பாதுகாப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நேரு வேடமணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் கே . சுவாமி நாதன்  மாநாட்டிற்கு தலைமை வகித்தார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்  மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் மதுரை  தொகுதி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது,  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே. சமுவேல்ராஜ்  ஆகி யோர் சிறப்புரையாற்றினர். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே. எஸ். அழகிரி காணொலி வாயிலாக மாநாட்டில் உரையாற்றினார். பங்கு விற்பனை எதிர்ப்பு தொடர்பான தீர்மானத்தை சங்கத்தின் தென்மண்டலப் பொதுச் செயலாளர் டி.செந்தில்குமார் முன்மொழிந்த தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. 

மாநாட்டில் எல்ஐசியின் சாதனைகளை விளக்கும் “எல்ஐசி ஒரு ஜீவநதி” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆ.செல்வம் வெளியிட சிஐடியுவின் மதுரை மாவட்டச் செயலாளர் ஆர்.தெய்வராஜ் பெற்றுக்  கொண்டார் . முன்னதாக மதுரைக் கோட்டச்  சங்க பொதுச்செயலாளர் என்.பி.ரமேஷ் கண்ணன்   வரவேற்புரையாற்றினார்.  தென்மண்டல இணைச்செயலாளர் வீ.சுரேஷ் நன்றி கூறினார் .  மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.ராமகிருஷ்ணன், எஸ்.கே.பொன்னுத்தாய், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.தெய்வராஜ், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன், தலைவர் செ.கண்ணன் மற்றும் பல்வேறு வர்க்க-வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள், தலை வர்கள்  மாநாட்டில் கலந்துகொண்டனர்.


எல்ஐசியின் வலிமை சாதாரணமல்ல; பங்குகளை விற்க அனுமதிக்கமாட்டோம்

மதுரை, நவ.14- அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் மதுரையில் மாநில அளவிலான எல்ஐசி பங்கு விற்பனை எதிர்ப்பு சிறப்பு மாநாடு  நடைபெற்றது.  இம்மாநாட்டில் உரையாற்றிய திமுக நாடாளுமன்ற உறுப்பி னர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசு கையில், “மத்தியில் நடைபெறுவது அடிமைகளின் ஆட்சி. அதாவது கார்ப்பரேட்டுகளின் ஆட்சி. பொதுச் சொத்துக்களை சூறையாட கார்ப்ப ரேட்டுகளுக்கு ஏற்றவர்கள் தான் இன்றைய ஆட்சியாளர்கள்.” என்று சாடினார். “1965-ஆம் ஆண்டில் ரூ. ஐந்து கோடி முதலீடுடன் தொடங்கப்பட்ட பின்பு அரசு முதலீடு சட்ட நிர்பந்தத் திற்காக ரூ.100 கோடியாக உயர்த்தப் பட்டது. அதற்குப் பின்னர் ஒரு  போதும் மத்திய அரசின் உதவியை  எல்ஐசி நாடியதில்லை. எல்ஐசி யின் உதவியைத் தான் மத்திய அரசு நாடியுள்ளது. ரூ. 5கோடி முத லீட்டிற்கு ஒன்றிய அரசிற்கு எல்ஐசி  கொடுத்த டிவிடெண்ட் மட்டும் 28,239 கோடி. இது தவிர நிறுவன வரி ஜிஎஸ்டி வரி என பல லட்சம்  கோடிகளை எல்ஐசி வழங்கி வரு கிறது. இப்படிப்பட்ட எல்ஐசியின்  பங்குகளை விற்க முயற்சிக்கின்ற னர். இதை நாம் அனுமதிக்கக் கூடாது” என்றும் அவர் கூறினார்.

மு.வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீர பாண்டியன் பேசுகையில், “நாட்டில்  ஆட்சி மாறும். பிரதமர் மாறுவார்.  காவல்துறை அதிகாரி மாறுவார். ஆனால் பொதுத்துறை நிறு வனங்களும் அரசுத் துறைகளும் அப்படியே தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. இவற்றை இனி யும் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். அதில் ஊழியர்கள், தொழிலாளர்கள் மட்டுமல்ல; தொழிற்சங்கங்களின் பங்கும் பிர தானமாக இருக்க வேண்டும். எல்ஐசி ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காகப் போராட வில்லை. இந்த அரசிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும்  என்பதோடு சேர்த்து அடுத்த தலை முறைக்கான போராட்டத்தையும் நடத்தி வருகிறார்கள். நிச்சயம் போராட்டம் வெல்லும்.” என்றார். எதிர்வரும் மக்களவைத் தேர்த லில் இடதுசாரிகளின் பங்களிப் போடு கூடிய ஆட்சி தான் அமை யும். ஒரு சொட்டு மையால் பாஜக  அரசு எந்தெந்த பொதுத்துறை நிறு வனங்களை தனியாருக்கு தாரை  வார்த்ததோ அதே ஒரு சொட்டு  மையால் அவற்றை மீட்டெடுப் போம். அதற்கான போராட்டத்தை யும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஒரு ஜீவநதி

மாநாட்டில் கலந்துகொண்டு இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப் பின் துணைத்தலைவர்  க.சுவாமி நாதன் பேசுகையில், “எல்ஐசி ஒரு ஜீவநதி. எத்தனையோ இடர்களை  கடந்து அது ஓடிக்கொண்டிருக் கிறது. விடுதலைப் பயிருக்கும், இந்திய மக்களின் கனவுகளுக்கும் வளம் சேர்க்கும் வற்றாத நீரூற்று களை வழியெங்கும்  உருவாக்கி யிருக்கிறது. ஓரடி பின் வாங்கு வதால் தீமையைக் கடந்து விட முடியாது என்கிறார் விவேகா னந்தர். இது தனியார் மய எதிர்ப்பு க்கும் முற்றிலும் பொருந்தும். கடந்த முப்பதாண்டுகளாக தனியார் மய எதிர்ப்புக்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகிறது, திறமை இல்லை, மக்களுக்கு நன்மை, நுகர்வோர் விரும்புகிறார்கள் என்பதெல்லாம் தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு மோடி அரசு கூறும் காரணங்கள். ஆனால் இதில் எந்தவொரு கார ணத்தையும் எல்ஐசிக்கு மோடியால் சொல்ல முடியாது. நிதித் தேவை என்ற பொய்க் காரணத்தைக் கூறி அரும்பாடு பட்டு வளர்த்தெடுத்த மக்கள் சொத்தை தனியாருக்கு மாற்ற முயலும் இலக்கை நோக்கிய முதற்படிதான் பங்கு விற்பனை. ஒன்றிய அரசு எத்த கைய முயற்சிகளை மேற்கொண்டா லும்  எல்ஐசியின் வலிமை அதை விடாது. எல்ஐசி பங்குகளை விற்கும் முயற்சிக்கு மக்களே தடைகளை உருவாக்குவார்கள்.

பட்ஜெட் நிதிப் பற்றாக்குறை யை ஈடுகட்ட அரசுக்கு ஒரு லட்சம் கோடி தேவை என்று வணிக இதழ்கள் கூறுகின்றன. ஒரு லட்சம்  கோடி வேண்டுமென்றால் வேறு வழிகள் இல்லையா? கார்ப்பரேட் வரிகளை இரண்டு சதவீதம் உயர்த்தினால் ஒரு லட்சம் கோடி  கிடைத்துவிடும் எனக் கூறினால் ஒன்றிய அரசு பதில் சொல்ல  மறுக்கிறது”. என்று அம்பலப்படுத் தினார்.

துணை நிற்பீர்!

தென்மண்டலப் பொதுச் செய லாளர் டி.செந்தில்குமார் பேசுகை யில், “இந்தியா முழுவதும் 3,796 அலுவலகங்கள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள். 13.50 லட்சம் முகவர்கள்.28.62 கோடி பாலிசிகள். குழு பாலிசிகளைச் சேர்த்தால் 40 கோடி. ஓராண்டில் தரப்பட்ட பாலிசி உரிமத் தொகை எண்ணிக்கை 2.29 கோடிகள். பாலிசி தாரர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைத் தொகை ரூ.1,47,754 கோடிகள். மத்திய அரசின் பத்தி ரங்களில் எல்ஐசியின் முதலீடு  ரூ.13.87 லட்சம் கோடி. மாநில அரசு களின் பத்திரங்களில் முதலீடு ரூ.9.87 லட்சம் கோடி. ரயில்வேயில் ஒன்றரை லட்சம் கோடி முதலீடு. பாரத் மாலா நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு  பல்லாயிரம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அர சின் மூலதனம் வெறும் ரூ.100 கோடி  தான். இப்போது பங்கு விற்ப னைக்காக அரசு மூலதனத்தை ரூ.25 ஆயிரம் கோடியாக உயர்த்தி யுள்ளது. 65 ஆண்டுகால வர லாற்றில் அரசிடம் கூடுதல் மூல தனம் வேண்டுமென எல்ஐசி  கேட்டதே இல்லை.தேச வளர்ச்சிக் காக, என்றும் மக்களோடு. என்றும் நம்பிக்கை தகராமல் இயங்கிக் கொண்டிருக்கும் எல்ஐசியை முழு அரசு நிறுவனமாக பாதுகாப்போம். அரசு பொது இன்சூரன்ஸ் நிறு வனங்களின் தனியார் மயத்தை தடுத்து நிறுத்துவோம். எங்களது போராட்டத்திற்கு அனைத்து அர சியல் கட்சிகள், ஜனநாயக. முற்போக்கு தொழிற்சங்க அமைப்புகள் துணை நிற்கவேண்டும் என்று கூறினார்.

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete