Thursday, November 4, 2021

தினமலரும் இந்தி திணிப்பு மத்யமர் சங்கிகளும்

 


ஜெய் பீம் தொடர்பாக ஏதோ மிகப் பெரிய சர்ச்சை உலவுவதாக தினமலர் இணைய தளம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதை அப்போது ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைக்க முடியவில்லை.

 அந்த மனக்குறையை ஒரு மத்யமர் சங்கி போக்கி விட்டார். அதனை மற்ற மத்யமர் சங்கிகளும் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

 ஸ்க்ரீன் ஷாட் கீழே உள்ளது.

 


தமிழிலும் தெலுங்கிலும் இந்தி பேசிய சேட்டை அடித்து அந்தந்த மொழியில் பேசும் போது இந்தியில் ஏன் உண்மை பேசு என்று சொல்லவில்லை? இந்தி பேசுபவர்களைக் கண்டு அச்சமா என்றெல்லாம் கேள்வி எழுப்பி தங்கள் மேதமையை வெளிப்படுத்தி உள்ளனர்.

 அடேய் அறிவுக் கொழுந்துகளா, இந்தியில் டப் செய்யப்பட்ட படத்தில் ஏற்கனவே இந்தியில்தான் இருவரும் பேசுகிறார்கள். இந்தியில் பேசுபவனை இந்தியில் பேசு என்று எப்படி ஐய்யா சொல்ல முடியும்? உதட்டசைவுக்கு ஏற்ப உண்மையை பேசு என்று எடுத்துள்ளார்கள்.

 பிறகு அந்த அடி: அது சேட்டுக்கு மட்டும் விழுந்த அடி. இந்தியை திணிக்க முயலும் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட அடி.

 

1 comment:

  1. Vaenum naa hindi version'la mutaal sanghigalukaaga samaskridhathila paesu'nu dialogue vakkailaam.

    ReplyDelete