ஒரு சொகுசுக் கப்பலில் ஷாருக்கானின் மகன் போதைப் பொருள் வைத்திருந்ததாய் கைது செய்யப்பட்டதும் பிணையில் வெளியே வந்ததும் இக்கைதில் ஆதாயமடைவதற்கான சதி நடந்துள்ளதாக என்.சி.பி அமைச்சர் ஒருவர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மீது குற்றம் சுமத்தியதும் நினைவில் இருக்கலாம்.
பிணை ஆணை நேற்றுதான் வெளியே வந்துள்ளது.
போதைப் பொருள் கடத்தவோ அல்லது பயன்படுத்தவோ சதி நடந்ததற்கான ஆதாரம் எதையும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு வழங்கவில்லை. கைது செய்யப்பட்ட ஷாருக்கான் மகன், நண்பன் ஆகியோரோடு கைது செய்யப்பட்ட இன்னொரு நபருக்கும் தொடர்பு இருப்பதற்குக் கூட ஆதாரமளிக்கவில்லை.
இவற்றை விட முக்கியமாக இவர்களை மருத்துவ சோதனைக்குக் கூட உட்படுத்தவில்லை.
இதுதான் பிணை ஆணையின் பிரதான அம்சம்.
அப்படியென்றால்
ஆர்யன் கான் கைது சதிச்செயல்தானோ?
சந்தேகம் வருகிறதே!
ஆதாரங்கள் எதையும் காட்டாமலே கைது என்றால் அவருடைய வக்கில் என்னசொல்லி வாதிட்டார்!
ReplyDeleteஅதனால்தான் பிணை சுலபமாகக் கிடைத்து விட்டது
Delete