நிறைகுடத்தை வைத்து நீர் இறைக்கும் ஆட்சியாளர்கள் - த.செந்தில் குமார்
இன்னல் மனிதர்களுக்கு ஏற்படும் போதுமட்டுமல்ல, அரசு நிதித் தேவைக்கோ அல்லது பங்கு சந்தைக்கோ இன்னல் ஏற்படும் போதெல் லாம் மின்னல் எனச் செயல்பட்டு இன்னலை இல்லாமல் செய்கிற ஒரு அரசு நிதி நிறுவ னம் இருக்குமென்றால் அது மக்களின் மனங் கவர்ந்த எல்ஐசிதான். பஹ்ரைன், கத்தார், குவைத், துபாய், அபுதாபி, ஓமன், இங்கி லாந்து, கென்யா, நேபாள், இலங்கை, பங்க ளாதேஷ், பிஜி, மொரிஷீயஸ், சிங்கப்பூர் என உலகின் பதினான்கு நாடுகளில் எல்ஐசி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 1970களின் இறுதியில் தமிழகத்தின் முக்கிய வார இதழில் ஒரு கார்ட்டூன் வந்தி ருந்தது. ஒருவர் பலமாடி கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து குதித்து விடுவார்.
கீழே விழுந்து கொண்டிருக்கும் அவர் பாதி தளத்தை தாண்டி கீழ்நோக்கி போய்க் கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு தளத்திலிருந்து கை ஒன்று வரும். அக்கை அவர் கையில் ஒரு காசோலையை கொடுக்கும். அது அவர் எல்ஐசியில் எடுத்தி ருந்த பாலிசியின் இறப்பு உரிமத் தொகைக் கான காசோலை. இது சற்று மிகைப்படுத் தப்பட்ட கார்ட்டூனாக இருந்தாலும் எல்ஐசி யின் விரைவான சேவை பற்றி குறிப்பிடும் பதிவாகும். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. எப்போதெல்லாம் இயற்கைச் சீற்றங்கள், பேரிடர்கள், பெரும் விபத்துகள் காரணமாக மரணங்கள் அதிகமாக நிகழும் போது விதிமுறைகளை தளர்த்தி இறப்பு உரிமத் தொகையை விரைவாக வழங்குவது எல்ஐசியின் வழக்கமாகும். பலநேரங்களில் நிவாரண முகாம்களிலேயே உரிமைத் தொகை வழங்கப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றதுண்டு.
எல்ஐசி நிறுவனத்தின் கடந்த ஓராண்டு (2020-21) செயல்பாடுகளை பாருங்கள்
- ஓராண்டு மொத்த வருவாய் - 6 லட்சத்து 82 ஆயிரம் கோடிகள் (6,82,205 கோடிகள்)
- கொரோனா கடும் சூழலில்பெற்ற புதிய பாலிசிகள் - 2 கோடியே 10 லட்சம்
- மொத்த உரிம பட்டுவாடா - 2 கோடியே 29 லட்சம் பாலிசிகள்
- உரிமப் பட்டுவாடா விகிதம் - 98.74 சதவீதம்
- ஓராண்டில் பங்குச்சந்தை முதலீடு (Share Market Investment) - 94,000 கோடிகள்
- சொத்து மதிப்பு - 38 லட்சத்து நான்காயிரம் கோடிகள் (38,04,610 கோடிகள்)
- 22 ஆண்டுகள் 24 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் போட்டியை சமாளித்து எல்ஐசியின் சந்தைப் பங்கு (Market Share) - 74%
- லண்டன் பிராண்ட் பைனான்ஸ் சர்வேயில் உலகளவில் பெரும் மதிப்பு பெற்ற அடையாளம் (Most Valuable brand) - 10ஆவது இடம்
- அடையாள வலிமையில் (Brand Strength) - 3ஆவது இடம்
- ஆர்டிஐ (RTI) கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் ஒருமுறை கூட அபராதம் கட்டாமல் பதிலினை உடனுக்கு உடன் அளித்த பெருமை.
- 13,53,808 முகவர்களைக் கொண்ட உலகின் முதல் இன்சூரன்ஸ் நிறுவனம்
மக்களின் பணம் மக்கள் முன்னேற்றத்திற்கே என்ற தாரக மந்திரத்துடன்
- ஒன்றிய அரசின் பத்திரங்களில் 13,87,821 கோடிகள்
- மாநில அரசுகளின் பத்திரங்களில் 9,87,544 கோடிகள்
- மின்சார வசதிக்கு, உற்பத்திக்கு 1,23,532 கோடிகள்
- சாலை, பாலம் மற்றும் இருப்புபாதை முன்னேற்றத்திற்கு 90,948 கோடிகள்
- வீட்டுவசதிக்கு 54,406 கோடிகள் என பலலட்சம் கோடிகள்முதலீடு
- இதுதவிர ஜிஎஸ்டி, நிறுவனவரி (Corporate Tax) என பல்லாயிரம் கோடிகள் அரசுக்கு ஆண்டுதோறும் வரியாக
- ரூ.5 கோடி அரசு முதலீட்டிற்கு இது வரை 28,299 கோடிகள் ஈவுத் தொகை (Dividend)
- 1956-61 இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்திலிருந்து 2012-17 பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டம் வரை (11 ஐந்தாண்டு திட்டங்கள்) மொத்தமாக 27,74,630 கோடிகள் (சராசரியாக ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திற்கும் 2,52,239 கோடிகள்)
இப்புள்ளி விவரங்களைப் பார்த்தால் உலகின் எட்டாவது அதிசயம் எல்ஐசி என்று கூட சொல்ல முடியும்.
எல்ஐசி நிறுவனத்தின் பங்குச் சந்தை முதலீடு இல்லாத ஒரு புளுசிப் கம்பெனி (Bluechip Company) கூட இல்லை என்கிற ஒரு சூழலில், கடந்த ஓராண்டில் பங்குச் சந்தையில் ரூ.94,000 கோடிகளை முதலீடு செய்துள்ள சூழலில் இந்நிறுவனத்தை வெறும் 1 லட்சம் கோடிகளுக்காக பங்குச் சந்தையில் பட்டியலிட (IPO) முனைவது நிறைகுடத்தை வைத்து நீர் இறைக்கும் செயலன்றி வேறென்ன?
தேச நலனும் இல்லை, ஜனநாயகமும் இல்லை
அரசு சொல்லும் காரணங்களுக்கு மக்க ளும், இன்சூரன்ஸ் ஊழியர்களும், அவர்களை ஒன்றுபடுத்தி மாபெரும் இயக்க மாக திகழ்கிற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் சரியான பதிலை அளித் துள்ளன. சில கேள்விகளையும் எழுப்பி யுள்ளன. ஆனால் அதற்கு பதில் அளிக்க இய லாத அரசு எல்ஐசி சட்ட திருத்த மசோதாவை தனி மசோதாவாக (Separate bill) நாடாளு மன்றத்தில் சமர்ப்பித்து விவாதம் செய்து முடிவெடுக்காமல் இவ்வாண்டு பட்ஜெட்டின் ஒரு பகுதியாக இணைத்து எவ்வித விவாதமு மின்றி கொல்லைப்புறமாக நிதி மசோதா வாக திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. நிதி மசோதா என்பதால் மாநிலங்களவையில் இது குறித்த தகவல் கூட இல்லாத நிலை. பெயரில் மட்டும்தான் தேசிய ஜனநாயக கூட்டணி. செயல்பாடுகளில் தேச நலனும் இல்லை. ஜனநாயகமும் இல்லை. கொரோனா பெருந்தொற்று அனுபவத்தின் அடிப்படையில், வளர்ந்த முன்னேறிய நாடுகளில் கூட உலகமயம் குறித்த மறு சிந்தனை ஏற்பட்டுள்ள சூழலில் தனியார், தாராள, உலகமயக் கொள்கைகள் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில் தொழிலாளி வர்க்கம் செய்ய வைக்கும். உள்நாட்டு சேமிப்பின் மீதான ஆளுமையை அந்நிய நாட்டு நிறுவ னங்களுக்கும், சில தனி நபர்களுக்கு மட்டு மெனவும் அளிப்பது என்பது நமது நாட்டின் பொருளாதார சுதந்திரத்திற்கு மட்டுமல்ல அரசியல் சுதந்திரத்திற்கும் ஆபத்தானதா கும். ஆகவே பாடுபட்டு பெற்ற சுதந்தி ரத்தை தக்க வைத்துக் கொண்டு முன்னேறு வதும் முக்கியமாகும்.
நேரு பிறந்த நாளில்...
இந்நிலையில் ஒன்றிய அரசின் தனியார்ம யக் கொள்கைகளுக்கு எதிராக வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி மதுரையில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஒருங்கி ணைக்கும் எல்ஐசி ஐபிஓ (LIC IPO) விற்கு எதி ரான தமிழ் மாநில சிறப்பு மாநாடு நடைபெற வுள்ளது. நவம்பர் 14க்கு ஒரு சிறப்பு உண்டு. அந்நாள் நவ இந்தியாவின் சிற்பி, பொதுத் துறையின் தந்தை பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள். அந்நாளில் மாநாடு நடைபெறுவது சிறப்புக்குரியது. தமிழகம் முழுவதுமிலிருந்து இன்சூரன்ஸ் ஊழியர்களும், மதுரை நகரிலுள்ள தொழிலாளி வர்க்கமும் இணைந்து களம்கா ணும் இம்மாநாட்டில் தனியார் மயத்தை எதிர்க்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.
நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம் புரிவாள் எங்கள் தாய் -
அவர் அல்லவராயின் அவரை விழுங்கிப் பின் ஆனந்தக் கூத்திடுவாள்
என்றான் பாரதி. அது நனவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை விடியாத இரவும் இல்லை . . . வடியாத வெள்ளமும் இல்லை . . .
(கட்டுரையாளர்: பொதுச் செயலாளர், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு)
நன்றி - தீக்கதிர் 14.11.2021
This comment has been removed by a blog administrator.
ReplyDelete