Friday, November 12, 2021

அன்புமணிக்கு ஆறு கேள்விகள்

 


 

ஜெய் பீம் படம் தொடர்பாக சூர்யாவிடம் ஒன்பது கேள்விகள் கேட்ட சின்ன டாக்டரிடம் ஒரு ஆறு கேள்விகள் கேட்கலாம் என்று தோன்றியது.

 

1)     என் வாரிசுகள் யாரும் தேர்தலில் நிற்க மாட்டார்கள், அமைச்சர் பதவிக்கு வர மாட்டார்கள், அப்படி நின்றால் என்னை முசந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடியுங்கள் என்று வேலூர் கோட்டை மைதானத்தில் உங்கள் தந்தை பேசியதை நானே கேட்டுள்ளேன்.  நீங்கள் அமைச்சரான பின்பு உங்கள் தந்தைக்கு சவுக்கடித் தண்டனை அளிக்கப்பட்டதா? எந்த முச்சந்தியில் அது நிறைவேற்றப்பட்டது? அல்லது திரிசூலத்தில் சிவாஜி ஒரு ஆள் வைத்து வீட்டுக்குள் சவுக்கடி பெற்றுக் கொள்வாரே, அது போல தைலாபுரம் தோட்டத்திற்குள்ளேயே ஏதாவது ஏற்பாடு உண்டா?

 

2)     எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் நீங்கள் நடத்திய போராட்டத்தின் போது கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன் வைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இந்த குற்றச்சாட்டிற்கு ஏன் பதில் சொல்லவில்லை?

 

3)     தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களை மூட உத்தரவிட்டீர்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் பெரும் முயற்சியினால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. அந்த நிறுவனங்களை வலிமைப்படுத்தியிருந்தால் கொரோனா தடுப்பூசி தயாரிக்க உதவிகரமாக இருந்திருக்குமே, நாம் இப்படி நாசப்படுத்தினோமே என்ற குற்ற உணர்ச்சி உங்களுக்கு எப்போதாவது வந்ததுண்டா?

 

4)     உங்கள் மீதான மருத்துவக் கல்லூரி அனுமதி ஊழல் வழக்கு என்ன ஆனது?

 

5)     உங்கள் சமூக மக்கள் மூன்று கோடி பேர் உங்களின் அடுத்த படத்தை ஓட்ட அனுமதிக்க மாட்டார்கள் என்று சூர்யாவை மிரட்டியுள்ளீர்கள். இப்படி வெளிப்படையாக மிரட்டுகிற உங்களை சட்டம், ஒழுங்கு, சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர் என்று சிறையில் தள்ளலாம் என்பது ஒரு புறம் இருக்க, உங்கள் சமூக இளைஞர்களை இன்னும் எத்தனை நாள் தவறாக வழி நடத்தி அவர்களை வன்முறைக் குற்றவாளிகளாகவே வைத்திருக்கப் போகிறீர்கள்? உங்கள் மஞ்சள் படை ஒருவர் போட்ட ஒரு நிலைப்பதிவே உங்கள் இளைஞர்கள் புரிதலுக்குச் சான்று.

 


                6)மாநிலங்களவை உறுப்பினரான நீங்கள் அவைக்கு       செல்வதுமில்லை.           சென்றாலும் எதுவும் கேட்பது இல்லை.                   பின் எதற்கு உங்களுக்கு அந்த             பதவி?

 

கீழே உள்ளது போனஸ் கேள்வி.

 

உங்கள் சமூக மக்கள் மூன்று கோடி பேர் இருந்தால் அதாவது தமிழக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் இருக்கையில் நீங்கள் ஏன் கூட்டணி வைக்கிறீர்கள்? அப்படி கூட்டணி வைத்தும் ஏன் தருமபுரியில் தோற்றுப் போனீர்கள்?

2 comments:

  1. 3 Kodi count'la avanga vettina marathai ellaam saethu irupaanga.

    ReplyDelete
  2. சார், இந்த பிழையை மட்டும் திருத்துங்கள்:

    //சட்டம், ஒழுந்து,சமூக//
    -ஒழுங்கு

    ReplyDelete