ஜெய்பீம்
படம் தொடர்பாக டாக்டர் வகையறாக்கள் இரண்டு அம்சங்களை முன் வைத்து பிரச்சினை செய்து
வருகிறார்கள்.
ஒன்று
அவர்கள் அமைப்பின் அடையாளம் காலண்டரில் தொங்குவது.
இரண்டாவது
அவர்களின் தலைவர் பெயரை வில்லனுக்கு சூட்டியது.
முதல்
கேள்வி: அவர்கள் அமைப்பின் செயல்பாடுகள் என்ன? விழுப்புரம் மாவட்டத்தில் குடிசைகளை
கொளுத்துவதில் தொடங்கியதுதானே அவர்கள் பணி! தர்மபுரி கலவரத்தை மறக்க முடியுமா? மக்களவைத்
தேர்தலில் பொன்பரப்பியில் நடத்திய வெறித்தாண்டவத்தை மறக்க முடியுமா? ஏன் சமீபத்தில் கூட சென்னையில் கல்லெறிதல் நடத்தவில்லையா?
மரக்காணம்
கலவரத்துக்காக பெரிய டாக்டர் கைது செய்யப்பட்ட நாளன்று தைலாபுரம் தோட்டத்திற்கு முன்பாக
நடந்த வன்முறைக் கலவரத்தில் மயிரிழையில் உயிர்
பிழைத்தவன் நான்.
அப்போது
எழுதிய பதிவு இங்கே.
பாமக அராஜகக் கும்பலிடமிருந்து நொடிகளில் உயிர் தப்பினேன், புல்லரிக்கும் நேரடி அனுபவம்
உலக
சமாதானத்திற்காக பாடுபடும் அமைப்பா என்ன உங்களுடையது சின்ன டாக்டரய்யா?
இருப்பினும்
கூட அந்த சின்னம் மாற்றப்பட்டு விட்டது. இருந்தாலும் காலண்டரை பிடித்துக் கொண்டு தொங்குவது
இழந்த செல்வாக்கை மீட்பதற்கான கேவலமான உத்திதான்.
அடுத்ததாக
வில்லனின் பெயர் கொண்ட தலைவர்.
அவர்
இறந்து போன காரணத்தால் விரிவாக எழுத விரும்பவில்லை. ஆனால் அவர் ஒன்றும் வள்ளலாரோ, அன்னை
தெரசாவோ கிடையாதல்லவா? அவரது மருத்துவச் செலவுக்கு பணம் தராமல் சாக விட்டார்கள் என்று
அவரது குடும்பத்தினரே குற்றச்சாட்டு வைத்தார்கள் என்பதை அவ்வளவு சுலபமாக மறந்து விட
முடியுமா? அந்த பெயர் கொண்ட இன்னொரு ஆளும் மோசமான விஷம்தான்.
டாக்டர்
வகையறாக்களின் தொண்டரடிப்பொடிகள் தாங்கள் தவறாக வழு நடத்தப் படுகிறோம் என்பதை புரிந்து
கொண்டால் நல்லது.
அப்படி
அவர்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் இந்த உசுப்பேத்தல். சரிதானே
சின்ன டாக்டரய்யா?
No comments:
Post a Comment