Wednesday, November 24, 2021

இனி விற்க ஏதுமில்லை.

 



 அறுபது நாட்களுக்கு முன்பாக என்னுடைய தொகுதி தொடர்பாக ஒன்றிய அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன்.

 ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை விற்கக் கூடாது என்பதுதான் இக்கடிதத்தின் நோக்கம்.

 அதற்குப் பிறகு அனுப்பிய கடிதம் அகில இந்திய வானொலியின் இடத்தை விற்காதே என்று.

 ரயில்வே பள்ளி நிலத்தை விற்கக் கூடாது என்பது மூன்றாம் கடிதத்தின் சாராம்சம்.

 தூர்தர்ஷன் நிலத்தை விற்காதே என்று நான்காவதாக ஒரு கடிதம் அனுப்பப் பட்டது.

 ரயில்வே மருத்துவமனையை விற்கக் கூடாது என்று ஐந்தாவதாக ஒரு கடிதம் அனுப்பினேன்.

 அறுபது நாட்களுக்குள் ஐந்து இடங்களை விற்க ஒன்றிய அரசு திட்டமிட்டது. அதை தடுப்பதற்கான முயற்சியும் போராட்டமும் தொடரும்.

 இனி அடுத்த கடிதம் அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது. ஒன்றிய அரசு திருந்தி விட்டதா என்று யோசிக்காதீர்கள்.

 இனி விற்பதற்கு மதுரையில் இடமில்லை என்பதுதான் உண்மை.

 14.11.2021  அன்று  மதுரையில் நடைபெற்ற “எல்.ஐ.சி பங்கு விற்பனை எதிர்ப்பு மாநில சிறப்பு மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் பேசியதிலிருந்து . . . .

 அப்படி திருப்தியடைய முடியாது வெங்கடேசன், மதுரை விமான நிலையம் இன்னும் அதானிக்கு விற்கப்படவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியது கூடுதல் தகவல்.

No comments:

Post a Comment