Saturday, November 13, 2021

யூ டூ யுவர் ஆனர்ஸ்?

 


 சென்னை உயர் நீதிமன்றத்துக்கு என்னத்தான் ஆனது என்று தெரியவில்லை.

 சென்னை மாதிரியான பெரிய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவரை தம்மாத்தூண்டு மாநிலத்துக்கு மாற்றுவது என்பது பதவிக் குறைப்பு, தண்டனை.

 இதற்கு முன்பாக தலைமை நீதிபதியாக இருந்த திருமதி தஹீல் ரமானி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டுப் போனார்.

 இப்போதைய தலைமை நீதிபதி திரு சன்ஜிப் பானர்ஜியும் அதே மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 அவருக்கு ஏன் இந்த பதவிக் குறைப்பு? ஏன் இந்த தண்டனை?

 சென்னை உயர் நீதிமன்றத்தில் செயல்படும் வழக்கறிஞர் தோழர் ஒருவரைக் கேட்ட போது அவர் நேர்மையான நீதிபதி என்றுதான் சொன்னார்.

 நேர்மையாக இருப்பதால்தான் மாற்றமா?

 நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலோஜியம் மீதான மிகப் பெரிய விமர்சனமே அதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதுதான். நீதிபதி மாற்றத்தின் போதாவது வெளிப்படைத் தன்மையை கடை பிடிக்கலாமே?

 தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகய், எஸ்.ஏ.பொப்டே காலத்திலிருந்து உச்ச நீதிமன்றம் மீண்டு வருவதாக நம்பிக் கொண்டிருந்த நேரத்தில் இப்படி ஒரு நிகழ்வு.

 வேறென்ன சொல்வது!

 யூ டூ யுவர் ஆனர்ஸ்?

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete