வேளாண்
சட்டங்களைப் பற்றி புரிய வைக்க முடியாமைக்கு விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்பதாக மோடி
சொல்லியுள்ளார்.
நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய பட்டியல் பெரிது மோடி.
கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகச் சொல்லி பண மதிப்பிழப்பு செய்து மக்களை நடுத்தெருவில் நிறுத்தி சிறு,குறு தொழில்களை ஒழித்தமைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்,
ஒரே நாடு, ஒரே வரி என்று அவசர கதியில் ஜி.எஸ். டியை உருவாக்கி மக்கள் மீது வரிச்சுமையை அதிகரித்து விட்டு கார்ப்பரேட் வரியை குறைத்தமைக்கு மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு திட்டமிடுவதற்குப் பதிலாக கை தட்டல், விளக்கேற்றல் என்று திசை திருப்பியமைக்கு இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.
அவகாசம் இல்லாமல் ஊரடங்கு அறிவித்து கோடிக்கணக்கான தொழிலாளர்களை பல நூறு கிலோ மீட்டர் வெயிலில் நடக்க விட்ட கொடுமைக்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.
இந்திய மக்களின் உழைப்பில் உருவான செல்வங்களான பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதற்காக ஒவ்வொரு இந்தியனிடமும் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.
24.11.2021 அன்று தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகளின் போராட்ட வெற்றி குறித்து நடைபெற்ற இணைய வழி சிறப்புக் கருத்தரங்கில் தென் மண்டல துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் பேசியதிலிருந்து.
No comments:
Post a Comment