தமிழில் கூகிள் தேடுதலில் "தக்காளி இல்லாமல்" என்பதுதான் கடந்த வாரம் ட்ரெண்டிங்காக இருந்தது என்றொரு செய்தி படித்தேன்.
நானும் அதை உறுதி செய்து கொண்டேன்.
அதைப் பார்க்கையில்தான் "தக்காளி இல்லாத வெங்காய சட்னி" நாம் வழக்கமாக செய்வதுதானே! அதைக் கூட தேடியுள்ளார்களே என்று நினைத்தேன். அப்படி தேடுபவர்களுக்கு உதவியாக இருக்கட்டும் என்று என் செய்முறையை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
வாணலில் எண்ணெய் விட்டு சூடானதும் கைப்பிடிக்கும் மேலாக வெள்ளை முழு உளுந்தை போட்டு பொன்னிறம் வரும் வரை வறுக்கவும். பிறகு வெட்டி வைத்த வெங்காயத்தை வதக்கவும். பிறகு நான்கைந்து மிளகாய் வற்றலை மூன்றாகக் கிள்ளி சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்.
நன்றாக ஆறியவுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அறைத்தால் "தக்காளி இல்லாத வெங்காய சட்னி" தயார்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteபதிவுக்கு தொடர்பில்லா பின்னூட்டம் என்பதால் நீக்குகிறேன். திரிபுரா பற்றி ஓரிரு நாளில் தனியாக எழுதுகிறேன். அப்போது பின்னூட்டமிடவும்
Delete