Monday, November 8, 2021

மோடி எனும் முட்டாளின் நாள்

 






ஐந்து வருடங்களுக்கு முன்பு இதே நாள், கிட்டத்தட்ட இதே நேரம், அரக்கோணம் சென்று திரும்புகிறேன். வாகன ஓட்டுனருக்கு 500 ரூபாய் நோட்டு ஒன்றை கொடுத்து விட்டு உள்ளே நுழைந்த போது தொலைக்காட்சியில் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தார். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்திருந்தார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கற்றுக் கொடுத்து கொஞ்சமாக நான் புரிந்து கொண்ட பொருளாதார அறிவிலிருந்து அப்போது சுடச் சுட எழுதிய பதிவு இங்கே.

மோடி பின் துக்ளக்




முகமது பின் துக்ளக்கின் வாரிசாக ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்துள்ளார் மோடி. 

என்.டி டிவி தடை விஷயத்தில் பல்டி அடித்தது போல இது விஷயத்திலும் பல்டி அடித்தால் வியப்பில்லை. 

கருப்புப் பணத்திற்கு எதிரான போர் என்று சொன்னாலும் அடிப்படையில் இது சாதாரண மக்களுக்கு எதிரான துல்லியமான தாக்குதல்.

ஏற்கனவே குவிந்துள்ள வேலைகளால் சிரமப்படும் வங்கிகளுக்கு தேவையற்ற பணிச்சுமை. 

கைவசம் உள்ள பணத்தை மாற்றுகிறவரை அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க முடியாத அவலம்தான் மக்களுக்கு.

கருப்புப் பணம் உள்ளவர்கள் எல்லாம் ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்களாகத்தான் வைத்திருப்பார்கள், அவையெல்லாம் இப்போது வெளியே வந்து விடும் என்று நினைத்தால் மோடியைக் காட்டிலும் முட்டாள் யாரும் இருக்க முடியாது. 

கண்டெய்னர்களில் பணத்தை பதுக்கத் தெரிந்த அரசியல் கிரிமினல்களால் அதை சிக்கல் இல்லாமல் மாற்றவும் முடியும். 

வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தை,  நிலமாக, நகையாக, பங்குகளாக பதுக்கி வைத்துள்ளவற்றை  எப்படி வெளியே கொண்டு வரப் போகிறார்?

இப்போது இந்த முடிவின் பின்னணியில் வேறு ஏதோ அயோக்கியத்தனத்தை சத்தமில்லாமல் செய்யப் போகிறதா என்ற சந்தேகம்தான் வருகிறது. 

பின் குறிப்பு : தன் கைவசமுள்ள நோட்டுக்களை மாற்ற ஆசான் ஏதாவது வங்கிக்குப் போனால் அவர் வேலையை முதலில் முடித்து அனுப்பி விடுங்கள். இல்லையென்றால் அவர் மீண்டும் "அறம்" கற்றுக் கொடுக்கத் தொடங்கி விடுவார். 

ஐந்தாண்டுகளுக்குப் பின்பு என்ன நிலைமை? 
கால்கடுக்க வரிசையில் நின்றோம். கைவிரலில் மை வைக்கப்பட்டோம்.
வரிசையில் நின்றவர் இறந்தாலும் வருத்தப்பட்டோமோ தவிர, அவரை கவனிக்கப் போய் நம் இடத்தை இழக்க விரும்பவில்லை.
சேகர் ரெட்டிகளுக்கு புதிய நோட்டுகள் பெட்டி பெட்டியாக கிடைத்தது.
பாஜக மட்டும் தன் வசமிருந்த பணத்தை முதல் நாளே வங்கியில் கட்டியிருந்தது.
ஈசலின் இறகினும் மெல்லிய தாள் என்று தோழர் பாலபாரதியால் வர்ணிக்கப்பட்ட நோட்டில் சிப்பு இருப்பதாஉ கதை கட்டிக் கொண்டிருந்தார்கள்.

நோட்டுக்களை புதிதாக அச்சடிக்க ஆன செலவளவிற்குக் கூட கறுப்புப் பணம் முடங்கவில்லை.
அடுத்த மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலில் பிடிபட்ட கூட்டத்தில் கையில் கத்து கத்தாய் புது நோட்டுக்கள்.
முந்தைய நோட்டுக்களை விட இப்போது கள்ள நோட்டுக்கள் அதிகம் வருவதென்பது காசாளர்களின் அனுபவம்.

முன்பே சொன்னோம். அன்றே சொன்னோம்.
இப்போதும் சொல்வோம். எப்போதும் சொல்வோம்.

செல்லா நோட்டு விவகாரம் என்பது
மோடி எனும் முட்டாளின் நடவடிக்கை.
அந்த முட்டாள்தனத்தை ஆதரித்து முட்டு கொடுத்தவர்களும்
முட்டாள்களே அன்றி வேறில்லை. 

No comments:

Post a Comment