நேற்று படித்த ஒரு சுவாரஸ்யமான பதிவு.
எஜமானர்களுக்கு ஜால்ரா அடிப்பதையே பிழைப்பாகக் கொண்டவர்கள் என்ற முறையில் இந்த கதை பொருத்தமாக இருந்தாலும்.
அடிமைகள் ஓபிஎஸ் & இபிஎஸ் ஆகியோரை பீர்பாலோடு ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை.
அரசன் தவறிழைக்கிற போது அதை சுட்டிக்காட்டி திருத்துகிற பீர்பால் எங்கே, இந்த அடிமைகள் எங்கே!
*நாளொரு கேள்வி: 22.04.2021*
தொடர் எண்: *540*
இன்று நம்மோடு மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் *வி. இரமேஷ்*
###########################
*மன்னரிடம் தான் பணிபுரிகிறேன். கத்திரிக்காயிடம் அல்ல*
கேள்வி: விவசாயிகள் சட்டங்களை அன்று ஆதரித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பி.எஸ், இ. பி.எஸ் இருவரும் இன்று சட்ட்டங்கள் வாபசை வரவேற்றுள்ளார்களே?
*வி.ரமேஷ்*
வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக தீர்மானம் கொண்டுவந்தபோது எதிர்த்து வெளிநடப்பு செய்தார்கள் ஈ.பி.எஸ் & ஓ.பி.எஸ் இருவரும்.
இன்று ரத்து செய்ததையும் ஆதரித்து அறிக்கை விட்டிருக்கிறார்கள்.
முகலாய மன்னன் அக்பரின் அரசவையில் இருந்தவர் *விகடகவி பீர்பால்.* ஒரு முறை அக்பரும், பீர்பாலும், இன்னொருவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அங்கு பறிமாறப்பட்ட கத்தரிக்காய் கூட்டின் ருசியில் ஈர்க்கப்பட்ட அக்பர் அதை விரும்பி சாப்பிட்டபடி பீர்பாலை பார்த்து, ”கத்தரிக்காய் உடம்புக்கு நல்லது” என்றாராம். அதற்கு பீர்பாலும் *”ஆமாமாம். கத்தரிக்காய் உடம்புக்கு நல்லது அரசே”* என்றாராம்.
சில நாட்கள் கழிந்ததும், மீண்டும் அவர்கள் ஒன்றாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது கத்தரிக்காய் கூட்டை சாப்பிடாமல் ஒதுக்கி வைத்த அக்பர், பீர்பாலை பார்த்து “கத்தரிக்காய் கூட்டு உடம்புக்கு கெடுதி” என்றாராம். அப்போது பீர்பால் *”ஆம் மன்னா. கத்தரிக்காய் உடம்புக்கு கெடுதி”* என்றாராம்.
இந்த இரண்டு தடவையும் இதை கவனித்த அந்த இன்னொருவர் பீர்பாலிடம் ”அன்றைக்கு மன்னர் கத்தரிக்காய் கூட்டு உடம்புக்கு நல்லது என்றபோது ஆமாம் என்றீர்கள். இன்றைக்கு கத்தரிக்காய் கூட்டு உடம்புக்கு கெடுதி என்றபோதும் ஆமாம் என்கிறீர்களே?... ஏன் மாற்றி மாற்றி பேசுகிறீர்கள்” என்று கேட்டாராம்.
அதற்கு பீர்பால்
*”நான் மன்னரிடம் தான் வேலை செய்கிறேன். கத்தரிக்காயிடம் இல்லை. மன்னருக்குத்தான் ஆமாம் போட முடியும்.கத்தரிக்காய்க்கு ஆமாம் போட முடியாது”* என்று பதில் சொன்னாராம் .
பீர்பாலின் நிலைதான் இங்கே ஈ.பி.எஸ் & ஓ.பி.எஸ். நிலைமையும்.
*செவ்வானம்*
No comments:
Post a Comment