Tuesday, November 30, 2021

வாழைப்பழ தேசத்தில் தோற்ற. . .

 தோழர் இ.பா.சிந்தன் அவர்களை பகிர்ந்து கொள்கிறேன்.


இந்தியாவிலும் பாசிஸம் நிச்சயமாக தோற்கும்.



ஹோண்டுரஸ் என்கிற நாட்டின் சுருக்கமான வரலாற்றையும், அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு மிகப்பெரிய நாயகனாக உருவாகிக்கொண்டிருந்த மேனுவேல் செலயாவை அமெரிக்கா சதித்திட்டம் தீட்டி நாட்டைவிட்டே கடத்திக்கொண்டு போய் வெளியேற்றியது குறித்தும் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். 


பின்னர் அக்கட்டுரையை தன்னுடைய “உணவு யுத்தம்” நூலில் எழுத்தாளர் எஸ்.ரா. மேற்கோளாகக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். (ஒரு வலதுசாரியாக அரசியல் வாழ்க்கையைத் துவங்கிய மேனுவேல் செலயா இடதுசாரியாக மாறி, இடதுசாரிக் கட்சியொன்றை உருவாக்கிய வரலாறேகூட சுவாரசியமானது தான். அதனையும் அக்கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தேன்.) "இந்த வாழைப்பழ யுத்தம் பற்றி சிறப்பான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார் இபா.சிந்தன். அவரது, ‘மீண்டுவருமா வாழைப்பழ தேசம்?’ என்ற வரலாற்றுத் தொடரில் ஹோண்டுரஸில் எப்படி அமெரிக்கா வாழைப்பழத் தோட்டங்களைக் கைப்பற்றி அரசை வீழ்த்தியது என்ற வரலாறு தெளிவாகக் கூறப்படுகிறது...." - எஸ்.ரா. 


 இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், அமெரிக்காவுக்கு மிக அருகிலே இருக்கிற ஒரு மிகச்சிறிய தேசமான ஹோண்டுரசில் தன்னுடைய மேலாதிக்கத்தை செலுத்திவந்த அமெரிக்காவை மீறி, அந்நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்று இன்று ஹோண்டுரசின் அதிபராக வெற்றிவாகை சூடியிருக்கும் சியோமாரா காஸ்ட்ரோ வேறு யாருமல்ல. அமெரிக்காவால் கடத்தப்பட்டு நாடுகடத்தப்பட்ட மேனுவேல் செலயாவின் மனைவி. 


 ஹோண்டுரசை கொலைகார தேசமாகவும், போதைக்கடத்தல் நாடாகவும் வைத்திருந்த அமெரிக்காவின் பேராதரவைப் பெற்ற தேசியக் கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. ஆனானப்பட்ட அமெரிக்காவையே அதன் காதருகே இருக்கிற ஒரு நாடு வெல்லமுடியும் என்று காட்டியதன் மூலம், உலகின் எந்த மூலையிலும் பாசிஸ்ட்டுகள் வெல்லமுடியாதவர்கள் அல்ல என்பதை ஹோண்டுரஸ் மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்…

No comments:

Post a Comment