"அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள்" என்று பராசக்தி குணசேகரன் போல கேள்வி கேட்காமல் 50,000 ரூபாய் திருப்பி அனுப்பிய விசுவாசி கண்மணி குணசேகரன் போல
டாக்டரய்யாவின் பழைய அம்பாசடர் கார் எழுதிய கதையை படித்து ரசியுங்கள்.
அந்த கால அம்பாசடர் கார் தங்க நாற்கர சாலைகள் எல்லாம் வராத அந்த காலத்தில் 120 - 140 கிலோ மீட்டர் வேகத்தில் போகுமா?
எட்டு பேருக்கும் மேல் பயணிகள் என்றால் காரின் கூரையில் உட்கார்ந்திருப்பார்களா?
அடுத்தவர் காசில் போடப்பட்ட அந்த எரிபொருளை என்ன செய்தார்கள்?
சாலையில் கொட்டினார்களா?
அல்லது
ஏதாவது குடிசையை கொளுத்த பயன்படுத்தினார்களா?
இப்படியெல்லாம் கேட்க ஆசை இருந்தாலும் கேட்கப் போவதில்லை. பாவம் அவர் மனது புண்பட்டு நஷ்ட ஈடு கேட்டால் கொடுப்பதற்கு என்னிடம் ஐந்து கோடி ரூபாய் இல்லையே!
No comments:
Post a Comment