Friday, November 19, 2021

அபத்தமான தீர்ப்பு அகற்றப்பட்டது

 


கடந்தாண்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை ஒரு அபத்தமான தீர்ப்பை அளித்தது.

ஒரு சிறுமியை ஒரு கிழவன் பாலியல் சீண்டல் செய்தான் என்று போக்ஸோ சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில்

அந்த சிறுமி ஆடைகள் அணிந்திருந்ததால், நேரடியான தொடுதல் இல்லாத காரணத்தால் வழக்கை தள்ளுபடி செய்தார் ஒரு பெண் நீதிபதி. 

நல்ல வேளையாக அந்த தீர்ப்பிற்கு தடை விதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தற்காலிக நீதிபதியாக இருந்த அந்த அம்மையாரை நிரந்தர நீதிபதியாக்காமல் பதவியிலிருந்து அகற்றினர்.

நேற்று உச்ச நீதிமன்றம் நாக்பூர் தீர்ப்பை ரத்து செய்துள்ளது. அது அபத்தமான ஒன்று என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஆடைகள் இருந்ததா, நேரடி தொடுதல் இருந்ததா இல்லையா என்பதெல்லாம் முக்கியமே இல்லை, பாலியல் சீண்டல் நோக்கம் இருந்ததா என்பது மட்டுமே முக்கியம்"

என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

குற்றவாளிகள் சட்டத்தின் குறைபாடுகளை பயன்படுத்தி தப்பிக்க அனுமதிக்கப் படக் கூடாது. 

No comments:

Post a Comment