Wednesday, September 1, 2021

Wanted ஆக சிக்கிக் கொண்ட மாலன்.

 


மாலன் தன் முகநூல் பக்கத்தை பூட்டி வைத்துக் கொண்டதால் அவர் உதிர்க்கும் முத்துக்கள் பற்றி அறியவோ எதிர்வினை ஆற்றவோ வழி இல்லாமல் இருந்தது.

நம் மனக்குறை அறிந்து அவரே நேற்று சிக்கிக் கொண்டார்.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ் நேற்று முக நூலில் “திவாலாகிப் போகும் தனியார் நிறுவனங்கள் பற்றி ஒரு பதிவு எழுதி சமீபத்தில் திவாலான நிறுவனங்களின் பட்டியலையும் கொடுத்திருந்தார். அந்த பதிவை கீழே தருகிறேன்.

"திவாலாகிவிட்டோம்" என அறிவித்து IBC யை நாடியுள்ள இந்த நிறுவனங்களில் எது பொதுத்துறை நிறுவனம்?
ஆயினும் பொதுப்புத்தியில் தனியார் என்றால் திறமை என்று வலிந்து திணிக்கப்பட்டு நிறுவப்பட்டிருக்கிறது..
REI Agro Limited
Gujarat Oleo Chem Limited
Raman Ispat Private Limited
Rotomac Global Private Limited
Rotomac Exports Private Limited
Vindhya Vasini Industries Limited
Loha Ispaat Limited
Samtel Color Limited
Conros Steels Private Limited
VISA Power Limited
Andaman Sea Foods Private Limited
Rasoya Proteins Limited
Vandana Energy & Steel Private Limited
Leather World India Limited
Sonear Industries Limited
Charbhuja Industries Private Limited
Varrsana Ispat Limited
Haridwar Iron & Ispat Rollings Private Limited
Santosh Overseas Limited
Birla Cotsyn (India) ltd
Osil Exports Limited
Vandana Vidhyut Limited
Compact lamps Private Limited
Macro Commerce Pvt Ltd.
Shree Shyam Pulp & Board Mills Limited
GeePee Infotech Pvt Ltd
Lanco Babandh Power Limited
HBN Dairies & Allied
Parivartan Buildtech Private Limited
Shri Lakshmi Cotsyn Limited
R.S. Ajit Singh and Company (Automotives) Private Limited
Quess East Bengal FC Private Limited
One World Industries Private Limited
Affinity Beauty Salon Private Limited
Kanik Electronics Private Limited
Hotline CPT Limited
Global Coke Limited
Keshav Sponge and Energy Pvt. Limited
Pincon Spirit Limited
Shree Coke Manufacturing Company Private Limited
Ankur Iron (India) Pvt Ltd
PSL Limited
Firestar Diamond International Private Limited
Globalite Industries Pvt. Ltd.
Camson Bio Technologies Ltd.
Amrit Feeds Limited
Idhasoft Limited
Scope Properties Pvt. Ltd

 இந்த பதிவுக்கு அண்ணன் மாலன் போட்ட பின்னூட்டம் கீழே.



 தனியார் நிறுவனம் என்றால் அது ஏதோ பெட்டிக்கடை, மளிகைக்கடை ரேஞ்சில் பேசுகிறார். முதலீடு போட்டவருக்குத்தான் நஷ்டம், வேறு யாருக்கும் கிடையாது என்று சொல்கிறார்.

 அவர் தெரிந்துதான் பேசுகிறாரா இல்லை அவ்வளவுதான் அவருக்குள்ள சரக்கா என்றும் தெரியவில்லை.

 கம்பெனிகள் சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்ட கம்பெனிகளில் பங்குகள் மூலம் முதலீடு செய்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

 உற்பத்தி நிறுவனமாக இருந்தால் மூலப் பொருட்களை அனுப்பியவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

 விற்பனை நிறுவனமாக இருந்தால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை அனுப்பியவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

 அந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்த பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் பாதிக்கப்படுவார்கள்.

 கடன் கொடுத்த வங்கிகள், அவர்கள் தனியாரோ அல்லது அரசு வங்கிகளோ அவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

 திவாலான நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் பாதிக்கப் படுவார்கள். அவர்களின் சேமிப்பான வருங்கால வைப்பு நிதி போன்றவையும் பறி போவதற்கான வாய்ப்பு உண்டு. வேலையிழந்த தொழிலாளர்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளும் பாதிக்கப் படுவார்கள்.

 ஓடிப் போனது என்ரான். பாதிப்பு மகாராஷ்டிர மாநில மின்சார வாரியத்திற்கு.

 ஓடிப் போனது மல்லய்யா, பாதிப்பு ஸ்டேட் வங்கிக்கு.

 இது போல பெரும் பட்டியலே தர முடியும்.

 இது கூட தெரியாமல் மாலன் சொல்லி இருப்பார் என்று நம்பவில்லை. தான் வாங்கும் பணத்திற்கு விசுவாசமாக தனியாருக்கு ஆதரவாகவும் பொதுத்துறைக்கு எதிராகவும் வாலாட்டியுள்ளார் அவர்.

 அவருக்கு ஒரே ஒரு ஆலோசனை.

 எப்படி உங்கள் முக நூல் பக்கத்தை பூட்டி வைத்தீர்களோ, அது  போல ஒட்டு மொத்தமாகவே அஞ்ஞாத வாசம் வாங்கி விடுங்கள். இப்படி அடுத்தவர் பதிவில் மூக்கை நுழைத்தால், சாரி வாலை ஆட்டினால், அந்த வாலை ஒட்டி நறுக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

 

No comments:

Post a Comment