Thursday, September 23, 2021

இரண்டாய் உடைந்த ஊழல் பாலம்.

 





செலவு எவ்வளவு? ஊழல் எவ்வளவு?

 நேற்று முன் தினம் காலை அலுவலகம்  செல்கையில் எங்கள் பகுதி பரபரப்பாக இருந்தது. எங்கள் நேதாஜி நகரையும் அருகில் உள்ள காந்தி நகரையும் ஒரு கால்வாய் பிரிக்கிறது.  அதன் மீது கட்டப்பட்ட ஒரு சிறு பாலம் ஒரு லாரியின் சுமை தாங்காமல் இரண்டாய் உடைந்து அப்படியே கீழே உட்கார்ந்து விட்டது.

 இந்த பாலம் நான்கைந்து  வருடங்கள் முன்பாகத்தான் கட்டப்பட்டது. அதற்குள்ளாக இடிந்து விட்டது என்றால் அதன் தரம் எப்படி இருக்கும் என்று பாருங்கள்.

 இப்போது ஸ்மார்ட் சிட்டி என்று வேலூர் மாநகரம் முழுதும் வேலை நடக்கிறது. கழிவு நீர் கால்வாய்கள் கட்டி அதன் மீது அழகுக்காக ஓடுகளும் ஸ்டீல் குழாய்களும் கட்டுவதுதான் முக்கியமான பணி. கழிவு நீர் கால்வாயின் மேற்புறம் சரியாக அமையாததால் மழை நீர் தேங்கி பாசி படிந்துள்ளது பாருங்கள்.

 


கழிவு நீர் கால்வாய்க்காக போடப்பட்ட  காங்கிரீட் காலம் ஒரே நாளில் பிரிக்கப் பட்டு விட்டது என்பது மட்டும் அச்சத்தைத் தரவில்லை, எடப்பாடியின் சம்பந்திதான் ஒப்பந்ததாரர் என்ற தகவல்தான் அதிக அச்சத்தை தருகிறது. 

 முந்தைய அதிமுக ஆட்சியாளர்கள் காலத்து கட்டுமானத்தில் எவ்வளவு ரூபாய் செலவானது, எவ்வளவு ரூபாய் ஊழலுக்காக ஒதுக்கப்பட்டது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

 ஊழல் தொகை அதிகரிக்க, அதிகரிக்க கட்டுமானத்தின் ஆயுள் குறைந்து கொண்டே இருக்கும் என்பதே யதார்த்தம்.

No comments:

Post a Comment