இன்று
எங்கள் எல்.ஐ.சி நிறுவனத்திற்கு 66 வது பிறந்த நாள். 1956 ம் ஆண்டில் தனியார் இன்சூரன்ஸ்
கம்பெனிகளின் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆயுள் காப்பீட்டை தேசியமயமாக்கி எல்.ஐ.சி
யை உருவாக்கினார் பண்டித ஜவஹர்லால் நேரு.
எல்.ஐ.சி
குடும்பத்தைச் சார்ந்த பாலிசிதாரர்கள், முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள், முதல் நிலை
அலுவலர்கள், மூன்றாம் பிரிவு, நான்காம் பிரிவு ஊழியர்கள் என அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியோடு
எல்.ஐ.சி உதய தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
நேரு
உயர்த்திப் பிடித்த மதச்சார்பின்மை கொள்கை மட்டும் மோடிக்கு எட்டிக்காயாய் கசக்கவில்லை,
அவர் உருவாக்கிய மகத்தான நிறுவனங்களும் கூட மோடிக்கு பிடிக்கவில்லை. ஆனால் அந்த நிறுவனங்களை
மோடியின் நண்பர்களுக்கு பிடித்துள்ளது.
ஆமாம்,
வாஜ்பாய்
காலத்தில் அவர்களால் இன்சூரன்ஸ் துறைக்குள் வந்தாலும் இருபதாண்டுகள் கடந்த பின்னும்
அவர்களால் எல்.ஐ.சி யின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை. எல்.ஐ.சி யோடு போட்டியிட
முடியாத காரணத்தால் எல்.ஐ.சி யின் பங்குகளை வாங்கி அதனுள் காலடி வைத்து விடலாம் என்று
கணக்கு போடுகின்றனர்.
“என்
கடன் முதலாளிகளுக்கு பணி செய்வதே” என்று கார்ப்பரேட் தரகராக மட்டும் செயல்படுகிற மோடி
அரசு, எல்.ஐ.சி நிறுவன பங்குகளை விற்க முயற்சி செய்கிறது. தனியாக மசோதா கொண்டு வரும்
துணிவின்றி பட்ஜெட் மசோதாவுக்குள் ஒளித்து வைத்து மோசடி செய்தது.
“வரலாற்றை
மறந்தால் வரலாறு மீண்டும் நிகழும், முன்னை விட கடுமையாக”
என்பது
சான்றோர் வாக்கு.
தனியார்
கம்பெனிகளின் கொள்ளைகளை முடிவுக்குக் கொண்டு வர உருவாக்கப்பட்ட நிறுவனத்தை தனியார்
கம்பெனிகளுக்கு ஆதரவாக சிதைக்க முயன்றால்
விளைவுகள்
முன்னை விட மோசமாக இருக்கும். மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மிகக் கடுமையாக இருக்கும்.
என்பதை
மோடிக்கு ஒரு எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறேன்.
கொஞ்சமாவது
அறிவை பயன்படுத்தப் பாருங்கள், உங்களுக்கு அது இல்லை என்பது தெரியும், யாரிடமாவது இரவலாவது
வாங்கி சிந்தியுங்கள் மோடி.
பி.கு:
எல்.ஐ.சி நிறுவனத்திற்கு உங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை ட்விட்டரிலும் முகநூலிலும்
#HBD_LIC-66
என்ற
ஹேஷ்டேக்கை பயன்படுத்திக் கூறவும்.
No comments:
Post a Comment