யாராவது இலக்கியவாதி இறந்து விட்டால் போதும், புளிச்ச மாவு ஆஜானுக்கு உற்சாகம் பிறந்து விடும்.
தன்னை அத்தனை பேரை விட மேம்பட்டவராக காட்டிக் கொள்ள, அனைவரையும் போட்டுத்தாக்குவார், அதில் இறந்து போன்வர் கூட விதி விலக்கல்ல.
கவிஞர் பிரான்சிஸ் கிருபா அவர்களின் இறுதி நிகழ்விற்கு அவர் சென்று வந்து விட்டார். அதற்கு அநியாய பில்ட் அப். யாரெல்லாம் வரவில்லை என்று பட்டியல் போட்டது மட்டுமல்ல, யாருக்கெல்லாம் கூட்டம் வரவில்லை என்றும் கூட. சமீப வருடங்களில் யாருடைய இறுதி நிகழ்விற்கும் சென்று வந்ததாக ஜெயமோகன் எழுதவில்லை என்பது முக்கியமானது.
இவரது ஆசானை இன்று ஏன் உயர்த்திப் பிடிக்கிறார் என்று தெரியவில்லை. அதற்காக ஜெயகாந்தனை சமூக ஆளுமை என்று மாற்றி விட்டார்.
அவர் கட்டுரையின் சில பகுதிகள்.
நான் பெற்ற துன்பம் நீங்களும் பெற . . .
இலக்கியவாதி மறைந்தால் சொல்லஞ்சலிகள் நிறைய வரும். நேரில் மிகக்குறைவான கூட்டமே வரும்.
எழுத்தாளர்களின் இறுதிநிகழ்வுகள் பெரும்பாலும் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டதுபோலத் தோன்றுகின்றன.
இலக்கியவாதிகளின் இறுதிநாளை கௌரவிக்க ஆள்திரட்டிவர அமைப்புகள் இருப்பதில்லை. குழுவாக எவரும் கிளம்பி வருவதுமில்லை. பிறதுறைகளின் ஆளுமைகள் மேல் அவர்களின் ரசிகர்களுக்கு இருப்பதுபோன்ற பற்று பெரும்பாலும் இலக்கிய வாசகர்களிடம் இருப்பதில்லை.
இலக்கிய வாசகர்களுக்கு உண்மையில் தாங்கள்தான் முக்கியம், இலக்கியவாதி இரண்டாம்பட்சம்தான். இலக்கியமே கூட அவர்களுக்கு அவ்வளவு முக்கியமல்ல.
ஜெயகாந்தன் பொதுவான சமூக ஆளுமை. ஓர் இலக்கிய ஆளுமைக்கு தானாகவே இறுதிநாள் அஞ்சலிக்கு இலக்கியவாசகர்கள் பெருமளவுக்குத் திரண்டது என்றால் கடைசியாக சுந்தர ராமசாமிக்குத்தான்.
எனக்கு எப்போதும் உருவாகும் அச்சம் என்பது படைப்பாளியின் இறுதிநாள் நிகழ்வுக்கு இலக்கிய வாசகர்கள் என ஒருவர்கூட வரவில்லை என்னும் நிலை அமைந்துவிடக் கூடாது என்பதுதான். ஆகவே தொலைபேசியில் அழைத்து அருகிலிருப்பவர்களிடமெல்லாம் செல்லும்படி மன்றாடுவதுண்டு. கூடுமானவரை நான் சென்றுவிடுவேன்.
படைப்பாளியை ஊராரும் வீட்டாரும் கொண்டாடாமல் போகக்கூடும். வாசகனும் அவனை புறக்கணித்தான் என்றால் அது அப்பண்பாட்டுக்குப் பெரும்பழி. அது ஒருபோதும் நிகழலாகாது. சென்னையில் ஞானக்கூத்தன் மறைந்தபோது நான் ஒவ்வொருவராகக் கூப்பிட்டுச் சொல்லியும்கூட என் சென்னை நண்பர்களில் பலர் செல்லவில்லை. அவர்கள்மேல் அந்த மனத்தாங்கல் இன்றும்கூட எனக்கு தீரவே இல்லை.
நெல்லையிலும் நாகர்கோயிலிலும் பிரான்ஸிஸை அறிந்த இலக்கிய நண்பர்கள் பத்துப்பதினைந்துபேர் இருந்தனர். மற்றபடி அரசியல்சார்ந்த இலக்கிய அமைப்புகளோ, அவற்றின் உறுப்பினர்களோ கண்ணில் படவில்லை. வாசகர்கள் என்றும் எவருமில்லை.
கவிஞர்கள் பிரான்ஸிஸின் கவிதைகளை வாசித்து அஞ்சலி செலுத்தினர். ஒருவேளை பிரான்ஸிஸின் கவிதைகள் அவர் மண்ணில் ஒலிப்பது அதுவே முதல்முறையாக இருக்கக்கூடும்.
வரிக்கு வரி பதில் எழுதலாம். அலுப்பாக இருப்பதால் முயற்சிக்கவில்லை.
எனவே இலக்கியவாதிகளுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.
ஜெயமோகன் எழுதிக் கொண்டிருக்கும் காலம் வரை தயவு செய்து இறந்து போகாதீர்கள். இல்லையென்றால் அவர் உங்களை இரண்டாவது தடவையாக எழுதிக் கொல்வார்.
உங்களிடம் மாட்டிக் கொள்ளவே ஜெயமோகன் எழுதுகிறார்
ReplyDelete