ஹேப்பி பர்த் டே ஜி
என்ன நீ இங்கிலிஷ்ல சொல்ற! சமஸ்கிருதம் இல்ல இந்தில சொல்லு.
ஜீ இங்க எச்.ராசா மட்டும்தான் இருக்காரு. அவர் கிட்ட கத்துகிட்டு உங்களுக்கு இந்திலயே வாழ்த்து சொல்றேன்.
நாசமா போச்சு! அவனுக்கு பிறந்த நாளுக்கும் செத்த நாளுக்கும் வித்தியாசம் தெரியாது. நீ எதுல வேணா வாழ்த்து சொல்லு. அவனை மட்டும் ட்ரான்ஸ்லேட் செய்யச் சொல்லாதே!
ஓகேஜி.
சரி, உங்க ஸ்டேட் முழுக்க என் பர்த்டே போஸ்டர், பேனர்தானே! பேஸ்புக், ட்விட்டர் எல்லாம் என் பிறந்த நாள்தானே செய்தி . . .
………………………………..
என்னய்யா, பிள்ளையார் சதுர்த்திக்கு மீந்து போன கொழுக்கட்டையை வாயில வச்சுருக்கய்யா ?
இல்லை ஜி. இங்க நாங்க எவ்வளவோ முயற்சி செஞ்சோம். நீங்க கொடுத்து விட்ட காசு வச்சு, அன்னதானம் செஞ்சோம், லட்டு எல்லாம் கொடுத்தோம். காபி, டீ கூட கொடுத்தோம்யா . . .
அப்ப நாந்தானய்யா டாக் ஆப் தி ஸ்டேட்டா இருக்கனும்?
ஆமாம்ஜி. ஆனா
என்னய்யா ஆனா?
இன்னிக்கு இங்க இன்னொருத்தருக்கும் பொறந்த நாளு. தமிழ்நாட்டில ரொம்ப பேரு அவரு பிறந்த நாளைத்தான் கொண்டாடினாங்க, பேஸ்புக், ட்விட்டர் எல்லாத்திலயும் அவருதான். இந்த ஸ்டாலின் வேற “சமூக நீதி நாள்”ன்னு அறிவிச்சு உறுதி மொழியெல்லாம் எடுக்க வச்சுட்டாரு. நம்ம மத்யமர் சங்கிங்க கூட என்னமோ பெரிசா உங்களை சீண்டலைஜி.
யாருய்யா அந்த ஆளு? அவ்ளோ பெரிய அப்பாடக்கர்?
அந்த ராமசாமி நாயக்கருங்க.
அதாரு?
அதாங்க பெரியார்.
இப்படி புரியற மாதிரி சொல்லு. அந்த கிழவனால எப்பவுமே நமக்கு தலைவலி தான்யா. செத்து இத்தனை வருஷம் கழிச்சும் மக்கள் நினைவுல வச்சுருக்காங்கய்யா. சரி தமிழ்நாட்டில மட்டும் எனக்கு வேற ஒரு நாளை பிறந்த நாளா முடிவு பண்ணி கொண்டாடலாம். அந்த நாளில்லயாவது எதுவும் வில்லங்கம் எதுவும் இல்லாம பாத்துக்கய்யா . . .
ஆட்டுக்கார அண்ணாமலைக்கும் மோடிக்கும் நடைபெறக்கூடிய உரையாடல் இப்படி இருக்கலாம் என்ற கற்பனைதான் மேலே உள்ளது.
தமிழர்களை புரிதல் உள்ளவர்களாக மாற்றுவதில் பெரும் பங்கு வகித்த தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் அவர் மறைந்து 48 ஆண்டுகளுக்குப் பின்பும் உற்சாகமும் எழுச்சியும் தருவது மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது. இன்றைய சங்கிக் காலத்தில் அவருக்கான தேவை அதிகமாகவே இருக்கிறது.
No comments:
Post a Comment