பாரதியின் பெயரில் காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்லைக் கழகத்தில் ஒரு தமிழ் இருக்கை அமைக்கப் போவதாக மோடி பாரதியின் நினைவு நாளன்று அறிவித்தார். தேமதுரத் தமிழோசை இனி வட இந்தியா முழுதும் பரவப் போகிறது, அது மோடியால் மட்டும்தான் முடியும் என்ற சங்கிகளின் ஜால்ரா சத்தம் காதுகளை புண்ணாக்கியது.
கெட்டிக்காரனின்
புளுகின் ஆயுளே எட்டு நாள்தான் என்றால் மோடியின் புளுகு எப்பொதுமே அல்பாயுசுதான் அல்லவா!
மூத்த
எழுத்தாளர் உஷா சுப்ரமணியன் மோடியின் புளுகை சுக்கு நூறாக தகர்த்தெறிந்து விட்டார்.
காசியில்
உள்ள பனாரஸ் இந்து பல்லைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஐம்பது வருடங்களுக்கு முன்பே அமைக்கப்பட்டு
விட்டதாகவும் தானே அங்கே தமிழ் பயின்ற மாணவர்தான் என்று தன்னுடைய பேராசிரியர்கள் பெயர்களையும்
சொல்லி மோடியின் அறிவிப்பு வழக்கம் பல ஒரு ஜூம்லா என்று நிரூபித்து விட்டார்
No comments:
Post a Comment