Friday, September 3, 2021

மத்யமர் சங்கிக்கு எது கவலை?

 எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் சதிச்செயலுக்கு வருந்தி ஒருவர் முகநூல்  மத்யமர் குழுவில்    பதிவு எழுதியிருந்தார்.

 


இன்னும் விற்கவில்லை. விற்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பதும் அதற்கெதிரான மிகப் பெரிய போராட்டமும் கருத்துத் திரட்டலும் நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் இன்றைய நிலை.

 அந்த பதிவில் வழக்கம் போல பல முட்டாள், முரட்டு மத்யமர் சங்கிகள் மோடிக்கு முட்டு கொடுத்து, பொதுத்துறை, அரசுத்துறை வேலைகள் எனும் திராட்சை கிட்டாத கிழ நரிகளாக தங்களின் வெறுப்பை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.

 ஆனால் ஒரு சங்கியின் பின்னூட்டம் வித்தியாசமாக இருந்தது.

 


அவருக்கு நான் ஒரு பதில் அளித்தேன்.

 வங்கத்தை மாபெரும் பஞ்சம் தாக்கிய நேரத்தில் பசுக்களை பாதுகாக்க நிதி தருமாறு விவேகானந்தரிடம் ஒரு பசு பாதுகாப்பு அமைப்பு ஒன்று கேட்டது. வங்கத்தில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் அன்றாடம் இறந்து கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கு உதவ என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று அவர்களிடம் விவேகானந்தர் கேட்கிறார். “மனிதர்கள் இறப்பது அவர்களின் பூர்வ ஜென்மப் பலன், கர்ம வினை. இதற்கு நாம் என்ன செய்ய முடியும்?” என்று அவர்கள் சொல்ல விவேகானந்தர் மிகவும் கோபத்தோடு “அப்படியென்றால் பசுக்களும் அவர்களின் கர்ம வினை காரணமாக செத்துப் போகட்டும்” என்று சொல்லி அவர்களை துரத்தி விட்டார்.

 அது போலவே

 இத்தேசப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்கிற, காப்பீடு செய்த குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்ற, தேசத்தின் கட்டமைப்புத் தேவைகளுக்காக பல லட்சம் கோடி ரூபாய்களை அள்ளிக் கொடுக்கிற,  குக்கிராமங்களுக்கும்  காப்பீட்டுச் சேவையை எடுத்துச் சென்றுள்ள, ஏழை எளிய மக்களுக்கு குறைந்த பிரிமியத்தில் காப்பீடு தருகிற, பாலிசிதாரர்களின் சேமிப்புக்கு பாதுகாப்பளிக்கிற எல்.ஐ.சி நிறுவனம் பற்றிய கவலை அவசியம் இல்லை என்றால்

 கிராமத்துக் கோயில்களைப் பற்றி அங்கே நடைபெற வேண்டிய அபிஷேகம் பற்றிய கவலை கொஞ்சம் கூட  அவசியமே இல்லை.

 தேசத்தின் பொருளாதாரம் தகர்ந்து போனால் அது பற்றி கவலைப் பட வேண்டாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் கோயில்கள் பற்றி நான் சொல்ல மாட்டேன்.

 எது உண்மையான பிரச்சினை, எதற்கு முன்னுரிமை அளிப்பது என்ற புரிதல் இல்லாதவர்களாக உங்களைப் போன்றவர்களை கட்டமைப்பது என்பதுதான் இது போன்ற  குழுக்களின் நோக்கமே!

 வெறியேற்றுவதில் சங்கிகள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதைத்தான் கவலையோடு இங்கே சுட்டிக்காட்ட விழைகிறேன். இந்த போக்கிற்கு எதிரான கருத்துக்களை, உண்மைகளை  நாம் மக்களிடம்  விரிவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை மத்யமர் சங்கிகள் ஒவ்வொரு நாளும் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.

 

 

 

9 comments:

  1. தலைவரே, LIC ஊழியர்கள் சொந்த மடம் இல்லாட்டி சந்த மடம்னு சொல்லிட்டு, எவன் அதிகமாக சம்பளம் கொடுக்கிறானோ அங்க போயிருவாங்க! ஆனா LICல பாலிசி போட்டவங்க கதி என்னாகிறது. LIC கவருமன்டு கம்பெனினு நெனச்சுதான் நான் பாலிசி போட்டேன் அனா அது தனியாருட்டபோயி திவாலச்சுனா என்னோட கதி! அதுனால ஊழியர்கள் ஒன்டியா போராட்டம் பண்னாம பாலிசிதாரர்களையும் சேத்துகிட்டு போராடுங்க

    ReplyDelete
    Replies
    1. உங்க விலாசம் சொல்லுங்க, அடுத்த போராட்டத்துக்கு தகவல் சொல்றேன்

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. உன் பதிவை நீக்க மகிழ்ச்சியாக உள்ளது நாயே. நீ உன் அடையாளத்தோடு வா, உன் யோக்கியதையை நான் சொல்கிறேன்

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. முகத்தை காண்பிக்க துப்பில்லாத நாயெல்லாம் கமெண்ட் போடக்கூடாது. யோக்கியன் ஏண்டா ஒளிஞ்சு வரனும்?

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete