கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மோடி கற்றுக் கொள்ள வேண்டும் என்று வாஷிங்டனில் உள்ள ஒரு நீதிமன்றம் அறிவிறுத்தியதாக ஒரு செய்தி சுற்றிக் கொண்டிருக்கிறது. அதன் மெய்த்தன்மையை சரி பார்க்க முடியாததால் அது பற்றி கருத்து சொல்வதும் சரியாக இருக்காது.
ஆனால் அதே நேரம் WE SUPPORT NIRMALA SEETHARAMAN என்ற குழுவில் வெளியான ஒரு செய்தியை படித்தேன். அந்த காமெடியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
பிரதமர் மோடி முகக்கவசம் இல்லாமல் அமெரிக்காவில் வலம்வருவது ஏன் வெளியான சீக்ரெட் தகவல்!
பிரதமர் மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார், அவரை வரவேற்க ஏராளமான இந்தியர்கள் சூழ்ந்த நிலையில், தன்னை வரவேற்க காத்திருந்த இந்தியர்களிடம் கையசைத்தும்,கைகளை கொடுத்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பிரதமர் மோடி.
அமெரிக்காவில் இந்தியர்களை சந்தித்தபோது பிரதமர் மோடி முக கவசம் அணியாமல் இருந்தார், இந்தியாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் குறிப்பாக தேர்தல் பிரச்சாரம் தொடங்கி முக்கிய அரசு நிகழ்ச்சிகள் வரை பொதுமக்களை சந்திக்கும் போதும் எப்போதும் முகக் கவசம் அணிந்து காணப்படுவார் மோடி.
இந்நிலையில் பிரதமர் மோடி அமெரிக்காவில் முக கவசம் இல்லாமல் வலம்வந்தது ஏன் என்று கேள்வி எழுந்தது, மேலும் தனது பாதுகாப்பையும் மீறி பொதுமக்களிடம் கை குலுக்கியது ஏன் என்ற கேள்வியை எழுப்பியது.
இந்த நிலையில் அதற்கு பதில் கிடைத்துள்ளது, உலகிலேயே தடுப்பூசிகளை அதிக அளவில் மக்களுக்கு செலுத்திய ஒரே நாடு இந்தியா, இரண்டு விதமான தடுப்பூசிகளை தயாரித்துள்ளது, ஒன்று கோவிசில்டு மற்றொன்று கோவாக்சின், இதில் கோவாக்சின் ஆனது, முழுக்க முழுக்க இந்திய அறிவியல் தொழில்நுட்பத்தில் கண்டறியப்பட்டது, இதன் பயன்பாடு உலக அளவில் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் அதிக வலிமை வாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்தியா மீது உள்ள காழ்புணர்ச்சியின் காரணமாக உலக சுகாதார அமைப்பானது, புதிய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை அங்கீகரிக்கவில்லை, இருப்பினும் மனம் தளராத இந்தியா தொடர்ந்து பிரதமர் மோடியின் முன்னேற்ற திட்டங்கள் மூலம் , மக்களை சென்று அடையும் விதமாக இந்திய மக்களுக்கு இலவசமாக கோவாக்சின் தடுப்பூசி வழங்க திட்டமிட்டது.
பல கோடி இந்தியர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தியது மத்திய அரசு, அதன் எதிரொலியாக இந்தியாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது, இந்தநிலையில் இந்திய நாட்டின் தடுப்பூசி திறமையை வெளிக்காட்டவும் உலக நாடுகளின் கவனத்தை பெறவும், பிரதமர் மோடி முகக்கவசம் இன்றி அமெரிக்காவில் வலம் வந்ததாக கூறப்படுகிறது.
எங்கள் சொந்த தயாரிப்பான தடுப்பூசி மிகவும் வலிமை வாய்ந்தது என காட்டவும் உலக நாடுகள் எங்களது தடுப்பூசியை பின்பற்றலாம் என தெரிவிக்கவும், மோடி முக கவசம் இன்றி உலக மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் செய்தியை தெரிவித்ததாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் செயல்பாடு இந்திய மக்களிடையே பெரிதும் போற்றதக்கதாக அமைந்துள்ளது.
அதேநேரத்தில் உலக நாடுகளின் பார்வையிலும் இந்தியப் பிரதமர் முகக்கவசம் இன்றி தைரியமாக வெளிவரும் நிலையில் கோவக்ஸின் தடுப்பூசி ஆனது மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கும் என்ற நம்பிக்கையும் உருவாக்கியுள்ளார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி 100% இந்திய தயாரிப்பான கோவக்சின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
நாடோடிகள் படத்தில் வருவது போல ஒரு தனி குழுவே இப்படி டுபாக்கூர் செய்திகளையும் வீர தீர பிரதாபங்களையும் பரப்ப பாஜக வைத்துள்ளது.
இதையும் நிஜமென ஒரு மூடர் கூட்டம் நம்பும். அதுதான் கொடுமை.
No comments:
Post a Comment