Wednesday, September 29, 2021

“வலிமை” புரிந்திருக்குமா?

 



 

எங்கள் ஊர் ஆதரிக்கவில்லை என்று மூடச்சங்கிகள் போட்டோஷாப் செய்தது ஒன்று போதும் நேற்று முன் தினம் நடைபெற்ற பாரத் பந்த் மகத்தான் வெற்றி என்று சொல்ல.

 

பல்வேறு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போனது.  போக்குவரத்து இல்லை. கடைகள் இல்லை. மறியல் செய்து கைதானார்கள். ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

 

தீக்கதிர் தொகுப்பு  பாரத் பந்த் எந்த அளவிற்கு எழுச்சியாக நடந்தது என்பதை சொல்லும்.

 

 

விலகிச் செல்லுங்கள்... இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் மூடப்படுகிறது. என்னை மட்டும் தடுத்து நிறுத்தி என்ன சாதிக்கப் போகிறீர்கள்” 

தில்லி நோக்கி செல்லும் ஹரியானா வின் நெடுஞ்சாலை ஒன்றில் அரிவாள் சுத்தியல் சின்னம் பொறித்த அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் கொடி யை ஏந்தியவாறு ஒரு மூதாட்டி கம்பீர மாக நடக்கத் துவங்கினார். போலீசார் வழிமறித்தனர். ஆவேசமடைந்த மூதாட்டி, போலீசாரை பார்த்து கூறி யது தான் இந்த வார்த்தைகள். மூதாட்டி கூறியது சத்தியமான வார்த்தைகள். ஆம், ஒட்டுமொத்த இந்தியாவும் செப்டம்பர் 27 அன்று விவ சாயிகளின் ஆவேசமிக்க எழுச்சியை  கண்டது.

 

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முற்றாக ஸ்தம்பித்தது. அநேகமாக வட இந்தியா முழுவதும் போக்குவரத்து முற்றாக முடங்கிப் போனது. நெடுஞ்சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. தில்லி யை நோக்கிச் செல்லும் பிரதான நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் கூடாரமடித்து தங்கினர். தில்லிக்குள் விவசாயிகள் நுழைந்து விடக் கூடாது என்ற எண்ணத்துடன் இயந்திர கதி யில் போலீசார் சாலைகளை தடுப் பரண்கள் கொண்டு மூடியதால் ஒட்டுமொத்த தில்லியும் போக்கு வரத்து நெருக்கடியில் சிக்கித் திணறி யது.

 

பல்லாயிரக்கணக்கான வாக னங்கள் தில்லி மாநகருக்குள் நுழைய  முடியாமல் பல மணி நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 19 அரசியல் கட்சிகள், 500க்கும்  மேற்பட்ட விவசாயிகளின் கூட்ட மைப்பானசம்யுத்த கிஷான் மோர்ச்சா  அழைப்பின் பேரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க செப்டம்பர் 27 பாரத் பந்த் பேரெழுச்சிநடைபெற்றது. மோடி அரசின் கொடிய வேளாண் சட்டங்களையும், விவசாயிகள் விரோத, மக்கள் விரோத மின்சார சட்டத்தையும் முற்றாக ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியை முற்றுகை யிட்டு விவசாயிகள் நடத்தி வரும் பிரம் மாண்டமான போராட்டம் மிகச் சரியாக பத்தாவது மாதத்தை எட்டியுள்ள செப்டம்பர் 27 (திங்களன்று) மோடி அரசு  இனியும் விவசாயிகளையும், மக்களை யும் வஞ்சிக்க முடியாது என எச்ச ரிக்கை விடும் விதமாக பாரத் பந்த் -  முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. பஞ்சாப், ஹரியானா, மத்தியப்பிர தேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ் தான், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், திரிபுரா, கேரளா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் முற்றாக முடங்கின.

 

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையிலான விவசாயி கள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு  சார்பிலும், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்எல்), திமுக, ஆர்ஜேடி,  சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட 19 அரசியல் கட்சிகளின் சார்பிலும் அனைத்து மாநிலங்களிலும் ஒன்றிய அரசு அலுவலங்கள் முன்பு மறியல், சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட ஆவேசமிக்க போராட்டங் கள் நடைபெற்றன. இந்த மாபெரும் பாரத் பந்த் போராட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்கள், அனைத்து ஒன்றிய தர வர்க்க ஊழியர் அமைப்புகள் பங்கேற்று மறியல் போராட்டங்களில் ஈடுபட்டன. தலைநகர் தில்லி ஜந்தர்மந்த ரில் பல்லாயிரக்கணக்கான விவசாயி கள் அணிதிரண்ட போராட்ட பேரணி நடைபெற்றது. அகில இந்திய விவ சாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா உள்ளிட்ட விவசாயி கள் இயக்கங்களின் தலைவர்கள் தலைமையேற்றனர்.

 

பாஜக சகாப்தம் முடிகிறது

 

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ் வாதிக் கட்சி, இடதுசாரிகள் மற்றும்  விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் எழுச்சிமிகு மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், “விவசாயிகளுக்கு மரியாதை கொடுக்காத ஆளும் பாஜக ஆட்சியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமையை இழந்துவிட்டது. இத்தோடு பாஜகவின் சகாப்தம் முடி கிறதுஎன்று கூறினார். ராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகர், பிகானிர், ஹனுமன்கர் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் எழுச்சிமிகு போராட்டங்கள் நடைபெற்றன. ஜெய்ப்பூரில் பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இங்கு பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பல்வால் புனியா பங்கேற்று உரையாற்றினார்.  பீகாரில் ஆர்ஜேடி, இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி களின் சார்பிலும், விவசாயிகள் சங்கங்களின் சார்பிலும் அனைத்து நெடுஞ்சாலைகளும், இருப்புப் பாதை களும் மறிக்கப்பட்டன. பாட்னா, போஜ்பூர், பெகுசராய், ஜகனாபாத், கிழக்கு சம்பரன், மாதேவ்புரா, நாளந்தா உள்ளிட்ட மாவட்டங்களில் எழுச்சிமிகு போராட்டங்கள் நடை பெற்றன. மேற்குவங்கத்தில் இடதுமுன் னணி சார்பில் ஆவேசமிக்க ரயில், சாலை மறியல் போராட்டங்கள் நடந் தன. ஹவுரா ரயில்நிலையத்திலிருந்து எந்த ரயிலும் வெளியேற அனுமதிக்கப் படவில்லை.

 

கொல்கத்தா உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்திருந்தது. திரிபுராவில் பாஜக அரசின் அச்சுறுத்தலையும் மீறி விவசாயிகள் முழு அடைப்புப் போராட்டம் முழு வெற்றிபெற்றது. தலைநகர் அகர்தலா  உட்பட மாநிலத்தின் அனைத்துப் பகுதி களிலும் கடைகள், வணிக நிறு வனங்கள் முற்றாக மூடப்பட்டிருந்தன. ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. இடதுமுன்னணி சார்பில்  மாபெரும் பேரணிகளும் நடைபெற்றன.

 

 மகாராஷ்டிராவில் அனைத்துப் பகுதிகளிலும் எழுச்சிமிகு போராட்டம் நடந்தது. தலைநகர் மும்பை உள்பட அனைத்து நகரங்களிலும் சாலை  மறியல், ரயில் மறியல் போராட்டங் களில் விவசாயிகள் ஈடுபட்டனர். தெலுங்கானா, ஆந்திராவில் கன மழை பெய்த போதிலும் ஐக்கிய  விவசாயிகள் முன்னணி மற்றும் இடதுசாரி  இயக்கங்கள் சார்பில் போராட்டம்  எழுச்சியுடன் நடந்தது.

 

 ஹைதரா பாத்தில் நடைபெற்ற பேரணியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பி.வெங்கட் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். ஆந்திராவின் விஜயவாடாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி.மது தலைமை யில் ஆவேசமிக்க மறியல் போராட்டம் நடைபெற்றது.

 

நாடு முழுவதும் நடைபெற்ற இந்தப் பேரெழுச்சியில் ஜம்மு-காஷ்மீர்  விவசாயிகளும் கரம் கோர்த்தனர். ஜம்முவில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப் ப்பாட்டத்தில் குப்கர் கூட்டணியின் கன்வீனரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப் பினருமான முகமது யூசுப் தாரி காமி உள்ளிட்ட தலைவர்கள் உரை யாற்றினர்.

 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையில் அனைத்துக்கட்சிகளும் இணைந்து நடத்திய போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். தலைநகர் ராஞ்சியில் கடைகள் முற்றாக அடைக்கப்பட்டி ருந்தன.  

 

ஒடிசாவில் மாநிலம் முழுவதும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி யினர் மறியலில் ஈடுபட்டனர். பொது  போக்குவரத்து கணிசமாக ஸ்தம்பித்தது. புவனேஸ்வரம், பாலா சோர், ரூர்கேலா, சம்பல்பூர் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் விவசாயி களின் மறியல் போராட்டம் நடந்தது.  புவனேஸ்வரம் ரயில்நிலையம், மறி யல் போராட்டத்தால் ஸ்தம்பித்தது. தில்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்கள் அனைத்தி லும் ரயில் போக்குவரத்து முற்றாக  ஸ்தம்பித்தது. பஞ்சாப் தலைநகர்  சண்டிகர் உட்பட அனைத்து நகரங் களிலும் பல பத்தாயிரக்கணக்கான விவசாயிகள் அணிதிரண்டுமோடி ஆட்சிக்கு முடிவுரை எழுதுவோம்என முழக்கமிட்டனர். ஒட்டுமொத்தத்தில் செப்டம்பர் 27 விவசாயிகள் தலைமையேற்று நடத்திய பாரத் பந்த் போராட்டம், இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றது மோடி ஆட்சிக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது.

 

முந்நூறு நாட்களையும் கடந்து உறுதியோடு போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டம் நாடு முழுதிலும் உள்ள உழைக்கும் மக்களை ஈர்த்துள்ளது. அவர்களை போராட்ட களத்திற்கு கொண்டு வந்துள்ளது.

 

விவசாயிகளின் கோபம், உறுதி, நியாயம், வலிமை ஆகியவற்றை இப்போதாவது மோடி உணர்ந்து கொண்டு செயல்பட்டால் கொஞ்ச நஞ்ச மரியாதையாவது மிஞ்சும்.

 

அவர்கள் உருவாக்கும் போட்டோஷாப் பொய்களுக்கு அவரே மயங்கினால் கேவலப்பட்டுத்தான் நிற்பார்.


No comments:

Post a Comment