Wednesday, September 22, 2021

காந்தி வேட்டியின் விளம்பரத்தூதர் அல்ல . . .

 




மகாத்மா காந்தி நூறாண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான் மேற்கத்திய ஆடைகளை துறந்து அரை ஆடை அணியத் தொடங்கினார். மதுரையில் ஒரு விவசாயியைப் பார்த்து அவர்களின் துயரங்களை அறிந்து அவர்கள் நிலை மேம்படும் வரை அரை ஆடை மட்டுமே அணிவேன் என்று உறுதியேற்றார்.

 இந்த சம்பவத்தை நினைவு படுத்துவது நல்லது. அதுவும் ஒவ்வொரு வேளையும், ஆடம்பர உடை உடுத்தும் அல்பத்தனமிக்கவர்கள் தலைமை தாங்கும் தேசத்தில் இந்த நிகழ்வு நினைவு படுத்தப் படுவது அவசியம்தான்.  ஆனால்  வேட்டிதான் காந்தியின் அடையாளம், காந்திதான் வேட்டியின் அடையாளம் என்று ஒரு வேட்டி நிறுவனம் காந்தியை தன் விளம்பர தூதுவராக மாற்றுவது என்பது ஏற்புடையதல்ல. காந்தியின் சிறப்பம்சங்கள் எவ்வளவோ இருக்க “ஸ்வச்ச பாரத்” என்று அவரை சுருக்க மோடி முயன்றது போலத்தான் இதுவும்.

 காந்தி ஏன் அரையாடைக்கு மாறினார் என்பதன் நோக்கத்தையே தொலைக் காட்சி விளம்பரங்களும் நாளிதழ் முதல் பக்க, முழு பக்க விளம்பரங்களும் சிதைத்து விடுகிறது.

 பிகு: இன்று காலை நாளிதழ்களில் வந்த விளம்பரம்தான் மேலே உள்ளது. அந்த நிறுவனத்திற்கு நாமும் விளம்பர தூதுவராக வேண்டுமா என்று அந்த நிறுவனத்தின் பெயரை மறைத்து விட்டேன்.

 

2 comments:

  1. அந்த நிறுவனத்தின் பெயர் கீழே உள்ளது. அதையும் மறைத்துவிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. மறைத்து விட்டேன்

      Delete