மூமூமூமூமூத்த்த்த்த்த்த்தததத பத்திரிக்கையாளர் மாலன் பழையபடி ஃபார்மிற்கு வந்து விட்டார் போல.
லட்சம் வீடுகளுக்கு வெளியே பிள்ளையார் சிலை வைக்கப் போவதான ஆட்டுக்கார அண்ணாமலையின் அறிவிப்பை ஒட்டி எழுத்தாளர் பா.ராகவன் பக்கத்தில் காரசார விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
சென்ற வருடம் விஷூ அன்று பாட்டையா பாரதி மணி தன் வீட்டிற்கு நண்பர்கள் வந்தனர் என்பதை பதிவு செய்த போது “வயதாகி டேஞ்சர் ஜோனில் இருக்கும் உங்களுக்கெல்லாம் விருந்தினர்கள் வேறா? அதை பதிவு வேறு போடுவீரா?” என்று அநாகரீகமான ஒரு பதிவெழுதினார்.
இப்போது அவர் எடுக்கும் நிலை அன்றைய நிலைக்கு முற்றிலும் முரணானது. கொரோனா எத்தனை பேருக்கு வந்தால் எனக்கென்ன? எனக்கு படியளப்பவனின் மனம் குளிர்ந்தால் போதும் என்ற நிலைதான் அவருக்கு.
சரி மாலன், மறுபடியும் உங்க முகநூல் பக்கத்தை திறந்து விடுங்க. அப்போதான் உங்களுக்கு நல்லா அடி விழும். அதை காரணம் காண்பித்து உங்க ரேட்டை உயர்த்திக்கலாம்.
உங்களுக்கு அடி வாங்கறதெல்லாம் புதுசா என்ன? துட்டு அதை விட முக்கியம் அல்லவா?
No comments:
Post a Comment