Wednesday, September 15, 2021

நிர்மலா அம்மையாரே செம தைரியம்தான் . .

 




 கேடி ராகவன் சமீபத்திய பிரச்சினை. இன்னும் பதினாலு தலைவர்களின் வீடியோ வேறு உள்ளது. விழுப்புரம் மாவட்டத் தலைவர் கலிவரதன் பேசிய ஆடியோ வேறு கொஞ்ச நாள் முன்புதான் சுற்றுக்கு வந்தது. மாநில அலுவலகத்தின் கதவுகளை திறந்துதான் வைக்க வேண்டியுள்ளது என்று அங்கலாய்த்தார் ஆட்டுக்கார அண்ணாமலை.

 இதைத்தவிர இன்னும் எத்தனையோ சம்பவங்கள் நினைவுக்கு வந்தது. இப்போது ஆளுனராகச் செல்பவர், இதற்கு முன்பு ஆளுனராக இருந்தவர், கர்னாடகத்தில் இப்போது அமைச்சராக இருப்பவர் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஏன் பிரதமராக இருப்பவரே முதல்வராக இருந்த போது ஒரு பெண்ணை வேவு பார்த்தவர்தானே!

 உங்கள் கட்சியின் யோக்கியதை இப்படி இருக்கும் போதே அதுதான் பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி என்று கொஞ்சம் கூட கூச்சப் படாமல் பொய் பேச உங்களுக்கு நிஜமாகவே தைரியம் அதிகம்தான் நிர்மலா அம்மையாரே!

No comments:

Post a Comment