Sunday, September 19, 2021

சுவெ-சீமான்-தமிழ்

 



நேற்று  முன் தினம் எழுதிய பதிவின் தொடர்ச்சி.

 சீமானும் மோடியும் ஒன்னு. 

 அது போலவே

 நாதக தம்பிகளும்  சங்கிகளும் ஒன்னு.

 “நீ தமிழன் கிடையாது, வந்தேறி” என்று சான்றிதழ் தரும் பொறுப்பை நாதக தம்பிகளும்

 “நீ இந்தியன் கிடையாது, தேசத்துரோகி” என்று சான்றிதழ் தரும் பொறுப்பை சங்கிகளும்

 எடுத்துக் கொண்டுள்ளனர்,

 நாதக தம்பிகள் தமிழர்கள் கிடையாது என்பதாலும்

சங்கிகள் தேச பக்தர்கள் கிடையாது என்பதாலும்

 தங்களுக்கு பொருந்தாததை அடுத்தவருக்கும் மறுக்கிறார்கள். இவ்விரு கோஷ்டியும் குத்தும் முத்திரைகளை நகைச்சுவையோடுதான் பல நேரம் கடந்து போனாலும் சில நேரமாவது திருப்பி அடிக்க வேண்டியுள்ளது.

 வந்தேறி என்று வர்ணிக்கப்படுகிற தோழர் சு.வெங்கடேசன், இரண்டு வருடங்களாக மக்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிற்கும் தமிழர்களின் நலனுக்காகவும் ஆற்றி வரும் பெரும் பணிகள் குறித்து இவ்வலைப் பக்கத்திலேயே ஏராளமாக எழுதியுள்ளேன். அவற்றை தொகுக்க நேரமும் பக்கங்களும் போதாது என்பதுதான் யதார்த்தம்.

 புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி பணம் வசூலித்து தன்னை வளப் படுத்திக் கொண்டதைத் தவிர தமிழர்களுக்கு சீமான் செய்துள்ளது என்ன?

 சரி இருக்கட்டும்.

 தமிழ் மொழிக்கு  சு.வெ என்ன செய்துள்ளார்?

 தமிழின் தொன்மையையும் தமிழர்களின் நாகரீகத்தையும் சொல்கிற கீழடி தொல்லியல் ஆய்வின் சிறப்பை உலகறிய வைத்ததும்  அந்த ஆய்வையே குழி தோண்டி புதைக்க மோடி வகையறா முயன்ற போது அந்த சதியை முறியடிக்க, கீழடி வெப்பத்தை பாதுகாத்த பெருமை தோழர் சு.வெ வையே சாரும்.

 முதல் நாவலிலேயே சாகித்ய அகாடமி விருது பெறுமளவிற்கு “ காவல் கோட்டம்”  என்ற சிறப்பான நூலை தமிழ் இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்தார்.

 முல்லைக்கு தேர் கொடுத்தான் கடையேழு வள்ளல்களில் ஒருவனான பாரி என்று சுருக்கமாக அறியப்பட்ட தமிழ் மன்னனின் வீர வரலாற்றை, பெரு மன்னர்களை மண்டியிட வைத்த  சாகசத்தை, இயற்கையின் பிரம்மாண்டத்தை உணர்த்திய காவியமான “வீர யுக நாயகன் வேள் பாரி” தோழர் சு.வெ தமிழுக்கு அளித்த மிகப் பெரிய கொடை.

 அப்படி சொல்ல சீமானிடம் ஏதாவது உண்டா?

மொக்கை மசாலா படங்களைத் தவிர . . . .

1 comment: