ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டி முடிந்ததும் அதே நகரத்தில் பாராலிம்பிக் என்று அழைக்கப்படுகிற மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி நடைபெறும்.
இப்போது டோக்கியோவில் நடந்து கொண்டிருக்கிற பாராலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் இம்முறை வெள்ளி வென்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் வென்றதை விட இம்முறை பாராலிம்பிக்கில் கூடுதல் பதக்கங்கள் வென்றுள்ளோம்.
இதுவரை நான்கு தங்கம், ஏழு வெள்ளி, ஆறு வெண்கலம் வென்று பதக்கப் பட்டியலில் இருபத்தி ஆறாவது இடத்தில் உள்ளோம்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.
கிரிக்கெட்டிற்கான முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்கு இல்லை என்பதை ஒலிம்பிக் போட்டிகளின் போது பேசுவோம். அந்த முக்கியத்துவம் கூட மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு கொடுக்கப் படுவதில்லை என்பதை வருத்தத்துடன் சுய விமர்சனத்தோடு சொல்கிறேன்.
ஒலிம்பிக்கில் ஒவ்வொரு பதக்கம் வென்ற போதும் பதிவெழுதிய நான், பாராலிம்பிக் பற்றி எழுதும் முதல் பதிவு இதுதான். அதிலும் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள் இல்லாமல். அந்த விபரங்களை அளிக்காமைக்கு வருந்துகிறேன்.
No comments:
Post a Comment