Sunday, September 5, 2021

நியாயப்படுத்தவே முடியாத அநியாயம்.


01.09.2021 அன்று சன் நியூஸ் தொலைக்காட்சியில் எல்.ஐ.சி பங்கு விற்பனை தொடர்பாக கேள்விக்களம் நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்றது. கிழக்கு பதிப்பக பத்ரி சேஷாத்ரி அரசியல் விமர்சகர் என்ற பெயரிலும் டி.ஆர்.சீனிவாசன் வலது சாரி என்ற பெயரிலும் மச்சமும் மருவும் ஒட்டிக் கொண்டு அமர்ந்த அந்நிகழ்வில் எங்கள் தென் மண்டல துணைத் தலைவர் தோழர் கே.சுவாமிநாதனும் பங்கேற்றார்.

பட்ஜெட்டின் ஒரு பகுதியாக எல்.ஐ.சி சட்டத்தை திருத்துவதற்கான ஷரத்துக்களை கொண்டு வந்தது சரியல்ல என்பதை இரண்டு சங்கிகளுமே ஒப்புக் கொண்டனர்.

 எல்.ஐ.சி ஒரு பொன் முட்டை இடும் வாத்து. அதனை அறுக்கக் கூடாது என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

 நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியில் தோழர் சுவாமிநாதன் பேசியதன் காணொளி கீழே உள்ளது.

 முழுமையான நிகழ்ச்சியின் யூட்யூப் இணைப்பு     இங்கே உள்ளது..    

 வலதுசாரிகளால் கூட நியாயப்படுத்த முடியாத அளவிற்கான அநியாயமான முடிவு எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்பது.

 தோழர் சுவாமிநாதன் சொன்னது போல பொன் முட்டையிடும் வாத்தை காயப்படுத்தத் தொடங்கி விட்டார்கள். அது எங்கு போய் முடியுமோ?

  

6 comments:

  1. ராஜன் சரவணன்September 5, 2021 at 10:44 PM

    LICயின் 10% பங்குகளை பொது மக்களுக்கு விற்பதால் கிடைக்கும் நன்மைகள்
    1. இந்த நிறுவனத்தின் உண்மையான செயல்பாடு பொது வெளியில் அறியபடும்.
    2. இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 15லட்சம் கோடி என்று அறியபடுகிறது. ஆனால் இந்த நிறுவனம் வருடம் தோறும் அரசுக்கு கொடுத்த ஈவு தொகை 7% கூட தாண்டாது. இந்த நிறுவனம் அரசை காப்பாற்றியது ஐடிபிஐ வங்கியை வாங்கியது என்று சொல்வது முரண் ஆனது. அதன் சொத்து மதிப்பு ஏறியது . ஐடிபிஐ வங்கி பங்குகள் விலையை ஒப்பீட்டு பார்த்தால் தெரியும். நட்டத்தில் இருக்கும் நிறுவனத்தின் பங்குகளை வாங்க வில்லை.
    3. தேவைக்கு அதிகமான ஊழியர்கள், மிகவும் மட்டரக மக்கள் சேவை என நிறைய நிர்வாக ரீதியான பிரச்சனைகள் உள்ளன.
    4. அரசே வணிகம் செய்வது தவறான பொருளாதார கொள்கை. ஊழியர்களை தவிர யாருக்கும் அதில் பயன் இல்லை.
    தற்போது விற்பனை கூடாது என சொல்வது யார்? எதற்க்கு பயன் இல்லாத இடது சாரி ஊழியர்கள்தான். எந்த இடத்திலாவது முதலாளிக்கு அறிவுறை சொல்லும் தொழிலாளி இருப்பார்களா? பயன் இல்லாத இவர்களை நிர்வாகம் வேலையை விட்டு விலக்கி இளய தலைமுறைக்கு வேலை கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அரைகுறை அறிவு ஆபத்தானது என்பதையே உங்கள் பின்னூட்டம் சொல்கிறது. இடதுசாரிகளை தூற்றும் யாரும் அறிவை பயன்படுத்துவது கிடையாது. அது என்ன எல்லா சங்கிகளுக்கும் எங்கள் வேலை மீதே எரிச்சல்? திராட்சை கிட்டாத கிழ நரிகளா?

      Delete
    2. ராஜன் சரவணன்September 6, 2021 at 6:38 PM

      அரை குறை அறிவாளியாகவே இருக்கட்டும்.
      வாழ்வில் பொற்கிழிகளை அள்ளுவர்களுக்கு அழுகிய திராட்சை எதற்க்கு?

      சில வருடங்களுக்கு முன்னர் general india assurance , new india assurance நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியல் இடப்பட்டது. அரசு 10% பங்குகளை பங்கு சந்தை மூலம் விற்றது. பலர் முட்டி மோதி பங்குகளை வாங்கினர். இன்று அந்த பங்குகளின் விலை என்ன? வாங்கியவர்களுக்கு என்ன லாபம்?? 1000 ரூபாய்க்கு வாங்கிய பங்கின் இன்றைய விலை 200 ரூ மட்டுமே. அதாவது 800 % மடங்கு நட்டம். அந்த நிறுவங்களில் ஏதாவது ஆட்குறைப்பு அல்லது வேறு ஏதாவது நடந்ததா? ஒன்றும் இல்லை. அந்த நிறுவனங்கள் சூப்பர் ஆகா ஓகோ என்று இடது சாரிகள் எழுதினார்கள்.
      அதாவது இன்று LICயை ஆகோ ஒஹோ என்று எழுதிகிறார்களே..அதை போலத்தான்.

      ஆனால் உண்மையில் நடந்தது என்ன? பங்குகளை வாங்கியவர்களுக்கு நட்டம் மட்டுமே. உண்மையில் இந்த நிறுவனக்கள் லாபத்தில் செயல்படுகிறது என்பதே ஒரு பொய் கூற்று. லாபத்தில் செயல்படுகிறதா என்பதை பங்கு விலை காட்டி கொடுத்து விடும். அனைத்து பங்குகளும் நன்றாக செயல்படும் இக்காலத்தில் நமது அரசுக்கு உரிமையான காப்பீட்டு நிறுவன பங்கு விலைகளை கவனியுங்கள் .. யாரும் சீந்தாமல் கொட்டி கிடக்கிறது.

      எந்த கார்பரேட்டும் ஏன் யாருமே சீந்தவில்லை..

      LIC நிறுவன்மும் பங்கு சந்தைக்கு வந்தால் அதன் உண்மையான மதிப்பு தெரிந்து விடும்.

      முற்றிலும் ஆட்குறைப்பு முழு தனியார்மயம் போன்ற செயல்களே அந்த நிறுவனங்களை காப்பாற்றும்.

      LICயும் அதே போலத்தான் .. 10% பங்கு விற்பனை அரசுக்கு மட்டுமே லாபம். வாங்குபவர்களும் நட்டத்தையே கொடுக்கும். தனியார்மயம் என இதை சொல்வது தவறு. பங்கு சந்தை விற்பனை கட்டுபாடுகளை கொண்டது. என்வே இந்த பங்கு விற்பனையை புறந்தள்ளி வேறு வேலையை பார்க்கலாம்.,

      அரசு உடைமையான அனைத்து காப்பீட்டு நிறுவனங்க்ள் அனைத்தும் முழு தனியார்மயம் ஆக்காத வரை பொதுமக்களுக்கு நன்மை இல்லை. சில ஊழியர்களுக்கு மட்டுமே நண்மை பயக்கும்.

      Delete
    3. பொதுத்துறை நிறுவனங்கள் மீதான காழ்ப்புணர்வு தவிர வேறு எதுவும் இல்லை. சொல்லியுள்ள தகவல்கள் அரை குறை என்பதை நிரூபிக்கிறது. தனியார்மயத்தால் எந்த நிறுவனத்தையும் காப்பாற்ற முடியாது. இந்திய வங்கித்துறையை அழிப்பதே கடன் வாங்கி மோசடி செய்யும் தனியார்தான்.

      Delete
  2. ராஜன் சரவணன்September 6, 2021 at 7:52 PM

    ஐயா அரைகுறை தகவல் எது என்று சொன்னால் தன்யன் ஆவேன்.

    கடன் கொடுப்பதே வங்கி துறையும் முதன் வேலை.
    வராக்கடனுமே வங்கி துறையின் ரெகுலரான விடயமே
    இந்தியன் வங்கியை ஆட்டையை போட்டது யார்?? கார்பரேட்டா?
    LIC ஹவுசின் பைனான்ஸில் வராக்கடனே இல்லையா??
    UTIயை ஆட்டையை போட்டது யார்?


    UTI இன்று AXIS ஆன பின் லாபம் அதிகரித்து இருக்கிறது.
    இன்று லாபம் கொழிக்கும் ICICI HDFC எல்லாம் ஒரு காலத்தில் பொதுதுறை நிறுவனங்கள் தானே.

    அரசு ஊழியர்கள் சார்ந்த நிர்வாகம் என்றும் உருப்பட்டது இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வங்கிகளை யார் ஆட்டையப் போட்டது என்ற புரிதல் ஒன்று போதுமே அரைகுறை என்பதற்கு. ICICI, HDFC யில் வராக்கன் கிடையாதா? ஏமாற்றுபவர்கள் எந்நாளும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே. அரசு ஊழியரை வசை பாடுவது என்பது அங்கே வேலை கிடைக்காதவர்கள், இட ஒதுக்கீட்டை விரும்பாதவர்கள் மட்டுமே. தனியார் க்ம்பெனிகளின் மோசடிகளை மூடி மறைப்பது அராஜகம். யூ.டி.ஐ யை அழித்தது மோடியின் முன்மோடி வாஜ்பாய். அதை நிமிர்த்தியது எல்.ஐ.சி. மேலும் தொழிலாளி முதலாளிக்கு ஆலோசனை சொல்வதா என்ற கேள்வி ஆணவம். இந்த திமிர்தான் பல தனியாரை திவாலாக்கியுள்ளது

      Delete