Monday, January 31, 2022

குடியரசு தினம் - காவிக்கலரு ஜிங்குசா

 


குடியரசு தின ஊர்வலமா இல்லை ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பா என்று யோசிக்கக் கூடிய விதத்தில் எங்கெங்கு காணினும் காவிக்கலர்தான்.

தூர்தர்ஷன் ஒளிபரப்பு யூட்யூபில் கிடைக்கிறது. அதிலிருந்து எடுத்த ஸ்க்ரீன் ஷாட்டுகளை கீழே அளித்துள்ளேன்.

முந்தையதொரு பதிவில் குஜராத் ஊர்தியில் ஆதிவாசிகள் போராட்டம் பற்றி இருந்தது. அது மோடி கண்டெடுத்த வரலாறு என்பதுதான் கொஞ்சம் உதைக்கிறது என்று சொல்லியிருந்தேன். அந்த ஆதிவாசிகள் கையில் காவிக்கொடி என்பதும் இன்னொரு காரணம். அது மட்டுமல்ல, எண்பதுகளில் பழங்குடி மக்களுக்ககு இட ஒதுக்கீடு தரக்கூடாது என்று மாதவ் சிங் சோலங்கி முதலமைச்சராக இருந்த போது பெரிய கலவரத்தை நடத்தியது பாஜக.

காஷ்மீரின் முகம் மாறி விட்டது என்று சொல்லும் ஊர்தியில் வந்தது வைஷ்ணவதேவி கோயில்.

சாமியார்கள் வருவது உபி, உத்தர்கண்ட் ஊர்திகளில் . . .

புதிய கல்விக் கொள்கை என்று சொல்லும் கல்வித்துறை ஊர்தியில் வேத கால முனிவர்கள். நடனமாடும் வாலிபர்களில் முதலில் இருப்பது காவிச் சட்டையும் பஞ்சகச்சமும் அணிந்த ஒரு மொட்டைத்தலை வாலிபன்தான்.

கர்னாடகா அனுமானை முன் வைத்தது.

காவிக்கலரிலிருந்து கோவா கூட தப்பவில்லை.

புத்தரின் ஆடை கூட மஞ்சள் நிறத்திலிருந்து காவியாக மாறுகிறது.













 

அனேகமாக அடுத்த வருடம் முப்படை வீரர்களுடைய சீருடையின் வண்ணத்தைக் கூட காவியாக மாற்றி விடும் வாய்ப்பு உள்ளது.

 

கோட்ஸே பல் இளிக்கிறான்.

 




இந்த ஏழாண்டுகளில் நிலைமை மாறியுள்ளது. முன்பெல்லாம் காந்தி ஜெயந்தியோ, காந்தி நினைவு நாளோ வந்தால் சங்கிகள் அடக்கி வாசிப்பார்கள். கோட்ஸேவுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று ஆர்.எஸ்.எஸ் சொன்னது போல அவர்களும் ஒதுங்கி நிற்பார்கள்.

 ஆனால் மோடி எனும் கேடி பிரதமரான பின்பு நிலைமை மாறிக் கொண்டே இருக்கிறது.

 காந்தியை எந்த அளவு திட்ட முடியுமோ, அந்த அளவு திட்டுகிறார்கள். காந்தி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் கிடையாது. அவருடைய கொள்கைகள், செயல்களோடு கண்டிப்பாக முரண்பாடு உண்டு. ஆனால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவரது மகத்தான பங்கையோ, விடுதலைப் போரில் சாமானிய மனிதர்களை ஈர்த்தவர் அவர்தான் என்பதையோ யாராலும் மறுக்க முடியாது.

 விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கருங்காலிகள் என்பதால் விடுதலைப் போராட்டத்தையும் அதிலே மகாத்மாவின் பங்களிப்பையும் கொச்சைப் படுத்திய பல பதிவுகளைப் பார்த்தேன். (மத்யமர் அரசியல் என்று தனியாக ஒரு குழுவே உருவாக்கப்பட்டு விட்டது. என் ரத்த அழுத்தம் அதிகரிக்கக் கூடாது என்று அதில் இணையவில்லை. அதில் என்னென்ன அபத்தங்களோ தெரியவில்லை)

 அது மட்டுமல்ல, கோட்சே காந்தியைக் கொன்றது நியாயமே என்ற பதிவுகளும் பல. தோழர் ஜெயச்சந்திர ஹாஷ்மி அவரது நட்புப் பட்டியலில் உள்ள ஒருவருடய பதிவை மனம் நொந்து பகிர்ந்து கொண்டார். அது இங்கே.



 காந்தியைக் கொன்றது கோட்ஸே என்று சொல்லக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் கூட்டத்தில் புகுந்து தடுக்குமளவு காவல்துறையில் சில கறுப்பாடுகள் காவிமயமாகி உள்ளன. வழக்கு வேறு பதிந்துள்ளார்கள்.

 இதையெல்லாம் பார்த்தால் கோட்ஸே கண்டிப்பாக பல் இளிப்பான்.

 அதிகாரத்தின் உச்சத்திற்கு ஒரு மோசமானவன் வந்தால் அவனால் அந்த ஒட்டு மொத்த அமைப்பையுமே நாசமாக்கி விட முடியும்.

 இன்றைக்கு இந்தியாவில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மோடி எனும் மோசமான மனிதன் ஆட்சிக்கு வந்து விட்டதால் சங்கிகள் எல்லோருமே தங்கள் கோரப் பற்களோடு ரத்தம்  ருசிக்க துடிக்கிறார்கள். பொய் சொல்லவோ விஷத்தைப் பரப்பவோ கொஞ்சமும் கூசாத ஜந்துக்கள் இவர்கள்.

 சுயேட்சையாக செயல்பட வேண்டிய அனைத்து அரசியல் சாசன அமைப்புக்களுமே, நீதிமன்றங்கள் உட்பட அரசின் கடைக்கண் பார்வைக்கு ஏற்ப செயல்படுகின்றன.

 மோடி ஆட்சியை தூக்கி எறிவதைத் தவிர வேறு எப்படியும் இந்த நிலைமையை மாற்ற இயலாது.

மோடியின் நிபுணர்களும் மோடியைப் போலவே!

 

இவையெல்லாம்தான் சுதந்திரப் போராட்டமா மோடி?

 

சுதந்திரப் போராட்டம் என்பதுதான் இந்தாண்டு குடியரசு தின ஊர்வலத்தில் அலங்கார ஊர்திகளுக்கான கருப்பொருள் என்று சொல்லி இருந்தது மோடி அரசு.

 

12 மாநிலங்கள் மற்றும் பல அரசுத்துறைகளின் அலங்கார ஊர்திகள் பவனி வந்தன.

 

ஊர்தியின் கருப்பொருள் என்ன என்பதை தூர்தர்ஷன் ஒளிபரப்பியது.

 

எந்தெந்த ஊர்தி என்ன கருப்பொருளை சொன்னது என்று பார்ப்போம்.

 

மேகாலயா    -  பெண்கள் முன்னேற்றம்

 

உத்தரப் பிரதேசம் – விஸ்வநாதர் கோயில்

 

உத்தர்கண்ட்  -

 

கோவா   - பாரம்பரியம்

 

சத்திஸ்கர் – பசு மாட்டின் பலன்கள்

 

மகாராஷ்டிரா – பல்லுயிர்களின் பெருமை

 

குஜராத்  - ஆதி வாசிகளின் போராட்டம்

ஹரியானா – விளையாட்டில் முதலிடம்

 பஞ்சாப் – விடுதலைப் போரில் பஞ்சாபின் பங்கு

 கர்னாடகா – கைவினைப் பொருட்கள்

 ஜம்மு காஷ்மீர் – மாறிப்போன முகம்

 அருணாச்சலப் பிரதேசம் – ஆதிவாசிகளின் போராட்டம்

 பொதுப்பணித் துறை – நேதாஜி 125

 கல்வித்துறை  -  புதிய கல்விக் கொள்கை

 அஞ்சல் துறை – பெண்களுக்கு அதிகாரம்

 கலாச்சாரத்துறை  - அரவிந்தர் 150

 ஜவுளித்துறை – தொழில் நுட்ப முன்னேற்றம்

 


















இதிலே பஞ்சாப், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களின் ஊர்திகள்தான் சுதந்திரப் போராட்டத்தை சொன்னது. குஜராத் ஊர்தியும் ஆதிவாசிகளின் போராட்டத்தை சொல்வதாகத்தான் இருந்தது. ஆனால் அந்த வரலாற்றை முதன் முதலில் சொன்னது மோடி என்பதுதான் கொஞ்சம் உதைக்கிறது. நேதாஜி 125 என்ற ஊர்தியைக் கூட சுதந்திரப் போராட்டமாக எடுத்துக் கொள்ளலாம். அரவிந்தர் பற்றிய ஊர்தியோ அவரது ஆன்மீகத்தைப் பற்றித்தான் சொல்லியது.

 ஆக சுதந்திரப் போராட்டத்தை உலகிற்கு சொல்லும் ஊர்திகள்தான் இந்த ஆண்டின் கருப்பொருள் என்று சொன்னதை பெரும்பாலான மாநிலங்களும் அரசுத்துறைகளும் மதிக்கவில்லையா அல்லது மோடி அரசு நியமித்த நிபுணர் குழுவிற்கு சுதந்திரப் போராட்டம் பற்றிய அறிவே அவ்வளவுதானா?

 மோடி எவ்வழியோ, நிபுணர்களும் அவ்வழி.

 மோடி நியமித்த நிபுணர்களும் மோடியைப் போலவே மூடர்களாகத்தானே இருக்க முடியும்!

 பிகு : அலங்கார ஊர்திகளின் ஊர்வலம் குறித்து இன்னும் இரண்டு பதிவுகள் வரும்.

 

Sunday, January 30, 2022

முதல்வரையும் தடுக்குமா போலீஸ்?

 

இன்று மிகவும் எரிச்சலூட்டிய நிகழ்வு கீழே உள்ளது.



இந்த போலீஸ்களுக்கெல்லாம் ஒரே ஒரு கேள்வி . . .


தமிழக முதல்வரையும் பேச விடாமல் தடுப்பீர்களா? அல்லது அவரது செய்திக் குறிப்புக்காக அவர் மீது வழக்கு பதிவீர்களா?

கோவையில் இன்னும் காக்கி, காவி நிறமாகவே உள்ளது என்பதையும் அதிகாரிகள் சங்கிகளாகவே வாழ்கின்றனர் என்பதும் தெளிவு. 

முதல்வர் உறுதியாக செயல்பட வேண்டிய தருணம் இது. 



அஹிம்சை வேண்டாம். ஆயுதமேந்து காந்தி

 


ஹேராம் சொன்ன 
உன்னைக் கொன்றது ஒரு கோட்ஸே.
இன்று ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு ஊரிலும்
வெறி கொண்டு அலைகின்றனர்
ஓராயிரம் கோட்ஸேக்கள்,
ஜெய்ஸ்ரீராம் முழக்கத்தோடு.

அமைதியைக் கொல்கிறார்கள்.
நம்பிக்கையைக் கொல்கிறார்கள்.
சுதந்திரத்தைக் கொல்கிறார்கள்.
வாழ்வாதாரத்தைக் கொல்கிறார்கள்.
உரிமையைக் கொல்கிறார்கள்.
உணர்வுகளைக் கொல்கிறார்கள்.
ஒற்றுமையைக் கொல்கிறார்கள்.
இந்தியா எனும் சிந்தனையையே 
நித்தம் நித்தம் கொல்கிறார்கள்

மதத்தின் பெயரால் குற்றம் செய்து
மதத்தின் பெயரால் தப்பிக்கும்
மதவெறியர்களை தண்டிக்க
அஹிம்சை இனி வேன்டாம் 
அண்ணலே ஆயுதமேந்து. 
குறைந்த பட்சம் தடியையாவது . . .





Saturday, January 29, 2022

பொய் சொல்லி, பயந்தாங்குள்ளி வானதி அம்மையார்

 


சங்கிகளுக்கு வரலாறும் தெரியாது. பூகோளமும் தெரியாது. வன்மமும் பொய்யும் நச்சுப் பிரச்சாரமும் மட்டும்தான் தெரியும் என்பதற்கு வானதி அம்மையார் ஒரு உதாரணம்.

அவரது ட்வீட்டை  பாருங்கள். அதை அவசரம் அவசரமாக அவர் நீக்கி விட்டார். அதற்கான காரணத்தை சொல்கிறேன்.



ஒன்பதாவது முதல் பனிரெண்டாவது வரை நான் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சர் சிவசாமி ஐயர் மேல் நிலைப்பள்ளியில். அதனால் வானதி சொல்வது முட்டாள்தனமான பொய் என்று சொல்ல முடியும். 

திருக்காட்டுப்பள்ளி வேறு, மைக்கேல்பட்டி வேறு. 

திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தஞ்சாவூருக்கு பேருந்தில் சென்றால் முருகன் கோயில் முதல் ஸ்டாப். ஒன்பத்து வேலி அக்ரஹாரம், ஐஸ் பேக்டரி இரண்டாவது ஸ்டாப். மூன்றாவது ஒரு ஸ்டாப் வரும். நான்காவது ஸ்டாப் மைக்கேல்பட்டி சர்ச்.

திருக்காட்டுப்பள்ளி எப்போதும் போல அக்னீஸ்வரர் (தீயாடியப்பர்) கோயில் பங்குனி உத்திர விழாவைக் கொண்டாடிக் கொண்டு, முருகன் கோயில் தீமிதி விழாவோடு மதம் மாறாமல்தான் உள்ளது. மைக்கேல்பட்டிக்கு இரண்டு ஊர் தள்ளியுள்ள வரகூர் கிருஷ்ணன் கோயில் உறியடித் திருவிழா மிகவும் பிரசித்தம். அதற்கடுத்த ஊர் பெயர் மறந்து விட்டது. இஸ்லாமியர்கள் பெருமளவு வசிக்கும் ஊர். ஆனால் எப்போதும் அமைதியாக இருக்கிற பகுதி அது.

 மைக்கேல்பட்டியிலிருந்து எத்தனையோ மாணவர்கள் சிவசாமி ஐயர் மேல்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

என் வகுப்பில் கூட மைக்கேல்பட்டியிலிருந்து லூயிஸ் என்ற நண்பனும் ஞானச் செல்வி என்ற மாணவியும் படித்தார்கள்.

மோசமான ஒரு இயற்பியல் ஆசிரியர், அந்த மாணவியை எப்போதும் ஞான சூன்யம், உனக்கு யார் அந்த பெயர் வைத்தார்கள் என்று திட்டிக் கொண்டே இருப்பார்.

நல்ல வேளை, அந்த பெண் தற்கொலை செய்து கொள்ளவில்லை. மத ரீதியான பிரச்சினையும் வரவில்லை.



அண்ணாமலை, வானதி, சங்கிகள் கவனத்திற்கு

 



ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முக்கியமான முகநூல் பதிவு.

 இந்த பதிவை படித்தாலாவது புத்தி வரும் என்ற மூட நம்பிக்கை எல்லாம் எனக்குக் கிடையாது. அவர்களின் பொய்ப்பிரச்சாரத்தை அப்பாவிகள் நம்ப வேண்டாம் என்பதற்காகவே பகிர்ந்து கொள்கிறேன்.

 பதிவின் தலைப்பில் முதலில் வானதி அம்மையாரின் பெயர் இல்லை. அவருக்காக ஒரு ஸ்பெஷல் பாயஸத்தை மாலை தர இருப்பதால் இந்த பதிவின் தலைப்பில் இணைத்துக் கொண்டேன்.

 


நான் அப்போது திருச்சி செயிண்ட் ஜோசப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். தீபாவளிக்கு அடுத்த நாள் மெரூன்-வெள்ளை சீருடையில் வர வேண்டும் என்கிற கட்டாயமில்லை. தீபாவளிக்கு வாங்கிய புது ஆடைகள் அணிந்து வரலாம். வீட்டில் தீபாவளி கொண்டாடும் வழக்கமில்லாததால் நான் சீருடை அணிந்து பள்ளிக்குச் சென்றேன். பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் ஒரு பாதிரியார். வகுப்புக்கு வந்த அவர் நீ ஏன் வண்ண ஆடை உடுத்தவில்லை என்று கேட்டார். தீபாவளியைக் கொண்டாடுவதில்லை என்பதால் புது உடை வாங்குவதில்லை என்றேன்.

 நீ ஒரு இந்துதானே என்றார்

 பிறப்பால் என்றேன்

 உங்கள் வீட்டில் தீபாவளி பலகாரம் செய்து சாமிக்கு படைப்பதில்லையா?

 சாமிக்கு என்று சொல்லி விட்டு நாம்தானே தின்கிறோம் என்று நான் சொன்னதும் வகுப்பில் சிரிப்பு

கடவுள் நம்பிக்கை இல்லையா?

 எனக்கும் எங்கள் வீட்டில் யாருக்கும் இல்லை..

 உங்கள் அம்மாவுக்குக் கூடவா? (இது அடிக்கடி நான் எதிர் கொள்ளும் கேள்வி. பெண்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என்பது இயற்கையிலேயே அவர்கள் கூந்தலுக்கு நறுமணம் இருக்கிறது என்பது போன்ற ஒரு நம்பிக்கை)

 ஆம்

 கடவுள்தானே உலகை நடத்திச் செல்கிறார். ரயில் எஞ்சினைப் போல….?

 ரயில் எஞ்சின் தானாக ஓடுவதில்லை. அதை இயக்க ஒரு மனிதனும், எரிசக்தியும் தேவை..

 இப்படியாக பாதிரியாருடன் விவாதம் நீண்டது

 உனக்கு இந்தப் பள்ளியில் யார் இடம் கொடுத்தது?

 தலைமை ஆசிரியரான பாதிரியார் இக்னேசியஸ்தான்…. என் அப்பா அவரைச் சந்தித்து 9 ஆம் வகுப்பில் எனக்கு இடம் கேட்டார். என்னுடைய 8 ஆம் வகுப்பு மதிப்பைப் பார்த்து பாதிரியார் இடம் கொடுத்தார்

 உங்கள் அப்பா என்ன செய்கிறார்?

 அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர்.

 அமைதியாக அதைக் கேட்ட உதவித் தலைமை ஆசிரியர் சிந்தித்தவாறே வெளியே சென்றார்..

 அத்தோடு என் பள்ளி வாழ்க்கை முடிந்தது என நினைத்தேன்

 அடுத்த வாரம் வகுப்புக்கு வந்த பாதிரியார் என்னை முறைத்துப் பார்த்தார். ஏன் நீளமாக முடி வளர்த்திருக்கிறாய். get your hair cut (முடியை வெட்டு) என்று மட்டும் சொன்னார். அவருக்கு அது மட்டுமே பிரச்சினை. கடவுள் நம்பிக்கை அல்ல

 அதே பள்ளியில் தொடர்ந்து 11 ஆம் வகுப்பு வரை படித்து, ஜோசப் கல்லூரியில் பியுசி ஒரு வருடமும், பி மூன்று வருடங்களும், எம் இரு ஆண்டுகளும் படித்து விட்டுத்தான் வந்தேன்

 இன்றும் திருச்சியை நெருங்கும் நேரத்தில் செயிண்ட் ஜோசப் பள்ளி வளாகத்திலிருக்கும் சர்ச் கோபுரத்தை காவிரிப் பாலத்திலிருந்து பார்க்கும் போது உடல் சிலிர்க்கும். அது பக்தியினால் அல்ல..